Cinema History
“இன்னைக்கு ஒரு சோகக் காட்சி இருக்கு”… படப்பிடிப்புக்குச் செல்லும்போதே சோகமான மனிதராக மாறிய நடிகர்… டெடிகேஷன்னா இதுதான்!!
சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் ஆகியோரை வைத்து பல திரைப்படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் பி.ஆர்.பந்தலு, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். “வீரபாண்டிய கட்டபொம்மன்”, “கர்ணன்”, “ஆயிரத்தில் ஒருவன்” போன்ற பல கிளாசிக் திரைப்படங்களை இயக்கியவர் பி.ஆர்.பந்தலு.
இவர் இயக்குனர் மட்டுமல்லாது சிறந்த நடிகரும் கூட. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ஒரு திரைப்படத்திற்காக தன்னுடைய மனநிலையையே சோகமாக மாற்றிய ஆர்.பந்துலுவின் அர்ப்பணிப்பு குறித்த சுவாரஸ்ய சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்.
1947 ஆம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் டி.ஆர்.மகாலிங்கம், டி.ஏ.ஜெயலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நாம் இருவர்”. இத்திரைப்படத்தை ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரே இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் கதையை எழுதியவர் ப.நீலகண்டன்.
இதையும் படிங்க: பிரம்மாண்ட ஏலியன் படத்திற்கு வந்த சிக்கல்… உதவி கேட்டு வந்த தயாரிப்பாளருக்கு “நோ” சொன்ன சிவகார்த்திகேயன்…
இதில் பி.ஆர்.பந்தலு ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாப்பாத்திரம் மிகவும் சோகமான கதாப்பாத்திரமாம். அந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற இருந்தது. அந்த படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து ரயிலில் சென்ற பந்தலு, சோகமான மனிதராகவே மாறினாராம். அந்த கதாப்பாத்திரத்தை அந்த அளவுக்கு உள்வாங்கி நடிக்க வேண்டும் என்பதற்காக ரயிலில் ஏறியவுடனே அந்த கதாப்பாத்திரமாகவே தன் சொந்த வாழ்வை நினைத்துக்கொண்டாராம். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புள்ள நடிகராக பி.ஆர்.பந்தலு திகழ்ந்தாராம்.