Connect with us
sivaji

Cinema History

இது மட்டும் நடந்தா 30 வருஷம் நான் சினிமாவை ஆள்வேன்!.. சிவாஜி எப்போது சொன்னார் தெரியுமா?…

சினிமாவை பொறுத்தவரை வாய்ப்பு கிடைக்க போராடுவது ஒரு பக்கம் எனில், கிடைத்த வாய்ப்பை தக்க வைக்கவும் போராட வேண்டும். இல்லையேல் காணாமல் போய்விடுவோம். அதிக தன்னம்பிக்கையும் நடிகர்களை காலி செய்து விடும். ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் அறிமுகமாகி 30, 40 வருடங்கள் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறார் எனில் அது சாதாரண விஷயமல்ல.

ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொண்டு நடிக்க வேண்டும். அதோடு, மாறும் ரசனைகள் மற்றும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நிலைத்து நிற்க முடியும். எம்.ஜி.ஆர், சிவாஜி பல வருடங்கள் சினிமாவை ஆண்டனர்.

sivaji mgr

கருப்பு வெள்ளை துவங்கி கலர் சினிமா வரை இவர்கள் நடித்த படங்கள் ஏராளம். அவர்களுக்கு பின் ரஜினி, கமல் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் அதிக வருடங்களாக நடித்து வருகிறார்கள். அதிலும் கமல்ஹாசன் 5 வய முதல் நடித்து வருகிறார். அதாவது 63 வருடங்களாக கமல் சினிமாவில் இருக்கிறார். இத்தனை வருடங்கள் கழித்தும் விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை அவர் கொடுக்கிறார்.

நடிகர் ரஜினியும் 47 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இவர்களுக்கு பின்னால் எத்தனை நடிகர்கள் பல வருடங்கள் தாக்குபிடிப்பார்கள் என்பது தெரியவில்லை. பல வருடங்களாக மார்க்கெட்டை தக்க வைப்பது ஒருபுறம் எனில், அதற்கு முன்பே தன்னம்பிக்கையோடு நான் இத்தனை வருடங்கள் சினிமாவை கலக்குவேன் என ஒரு நடிகர் சொன்னார் என்றால் நம்புவீர்களா?.. அதுதான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

sivaji

நாடகங்களில் நடிக்கதுவங்கி அப்படியே சினிமாவுக்கு வந்தவர். இவர் நடித்த முதல் படமே திரையுலகை திருப்பி போட்டது. அதுதான் பராசக்தி. பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்த இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பராசக்தி படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது சிவாஜியின் நண்பரும், அந்த படத்தில் நடித்தவருமான வி.கே.ராமாசமி சிவாஜி மற்றும் மற்ற நண்பர்களுக்கு வீட்டில் ஒரு விருந்து கொடுத்தாராம். விருந்து முடிந்து பேசிக்கொண்டிருந்த போது திடீரென எழுந்த சிவாஜி, அங்கிருந்த மேஜை ஒன்றின் மேல் தனது வலது கையால் ஓங்கி அடித்து ‘இந்த படம் நல்லபடியாக முடிந்து வெளியாகி வெற்றி பெற்றால் அடுத்த 30 வருடத்திற்கு சினிமாவை நான்தான் ஆள்வேன்’ என்று சொன்னாராம்.

vk ramaamy

இந்த தகவலை மறைந்த நடிகர் வி.கே. ராமசாமியே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். தன் மீதுள்ள நம்பிக்கையில் சிவாஜி அப்படி கூறியுள்ளார். அதேநேரம், அவர் கூறியபடியே அடுத்த 30 வருடங்கள் அவரை யாராலும் அசைக்கமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிவாஜியின் ஆக்டிங் ஸ்டைலை மாற்ற தயாரிப்பாளர் செய்த யுக்தி… எப்படியெல்லாம் மெனக்கெட்ருக்காங்க பாருங்க!!

google news
Continue Reading

More in Cinema History

To Top