இதுக்குதான் கல்யாணமே பண்ணிக்கிட்டேன்!.. ஓப்பனா பேசி அதிரவிட்ட ஸ்ருதிகா (வீடியோ)…

Published on: December 30, 2022
sruthika
---Advertisement---

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து திரை உலகில் அறிமுகமானவர் ஸ்ருதிகா. வாரிசு நடிகையாக திரையுலகில் அறிமுகமானாலும் இவரால் வெற்றிக்கான முடியாத காரணத்தினால் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தி யுனிவர்சிட்டி கோல்ட் மெடல் வெற்றி பெற்று பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

sruthika

அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஸ்ருதிகா குக்கு வித்து கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார். இந்த நிலையில் இவர் பல திரையில ஒரு பிரபலங்கள் ஷாப்பிங் செய்த வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் அப்படி என்னதான் இருக்கு என்பதை அறிந்து கொள்ள ஷாப்பிங் செய்துள்ளார்.

sruthika

விதவிதமான புடவைகளை பார்த்து வியந்து போய் உள்ளார். போச்சம்பள்ளி புடவைகளை பார்த்து பல்லி மட்டும் எனக்கு வேண்டாம், எனக்கு ரொம்ப பயம் என கூறிய இவர் என்னிடம் துணியா நகையா என கேட்டா நான் துணியைத் தான் ஓடிப் போய் அள்ளுவேன். அதுக்காகவே தான் என் புருஷன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான் என தெரிவித்துள்ளார்.

sruthika

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் உள்ள ஒவ்வொரு டிசைன் புடவைகளுக்கும் இவர் ஒரு புது பெயரை சூட்டி உள்ளார். இவருடைய கலகலப்பான ஷாப்பிங் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.