Cinema History
இது ரசிகர்களின் நாடித்துடிப்பின் கணிப்பு….2022ல் டாப் 5 படங்கள் இதுதாங்க….!
ஆண்டுதோறும் தமிழ்ப்படங்கள் வெளியாகும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் வார வாரம் ஆரவாரத்துடனும், சப்தமில்லாமலும் பல சிறுபட்ஜெட் படங்களும், பெரிய பட்ஜெட் படங்களும் வந்த வண்ணம் உள்ளன.
அவற்றில் இந்த ஆண்டு டாப் 5 படங்களாக ரசிகர்களின் ரசனையின் படி இந்தப் படங்களைச் சொல்லலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாமா..
கார்கி
இது ரொம்ப சிம்பிள் படம். இந்தப் படமும் ரிலீஸாச்சான்னு ஆச்சரியப்படுவாங்க. ஆனால் இந்தப் படத்தின் கதைதான் படத்தை 5வது இடத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ஒரு பெண் கதாபாத்திரம் தான் இந்தப்படத்தின் முக்கிய ரோல்.
இவர் தனது அப்பாவை ஒரு இக்கட்டான சூழலில் இருந்து எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே கதை. அதிலிருந்து வருகிற டுவிஸ்ட் தான் படத்தோட பிளஸ் பாயிண்ட். படத்தின் திரைக்கதை தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.
சாய்பல்லவி நடித்துள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர். ரொம்ப அருமையான நடிப்பைக் கொடுத்துள்ளார் சாய்பல்லவி.
சர்தார்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ராஜிஷா விஜயன், சுங்கி பாண்டி, லைலா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷகுமார் இசை அமைத்துள்ளார்.
கார்த்திக் நடிப்பில் வெற்றிகரமான படம். திரைக்கதை தான் வெற்றிக்குக் காரணம். காட்சிகள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை எகிற வைக்கின்றன. வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கார்த்திக் டாப் 10 இடங்களுக்குள் வந்துவிடுகிறார். 4வது இடம்.
லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நாயகனாக நடித்துள்ளார். அவருடன் பாரத், இவானா, சத்யராஜ், யோகிபாபு, ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.
நிறைய பேரு முக்கியமா காலேஜ் மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு திரையரங்கிற்கு வந்து பார்த்த படம்.
கதை, திரைக்கதை, எடிட்டிங், யுவனின் இசை என அனைத்துமே செம ஹிட். முக்கியமாக இவானாவின் அழகு நடிப்பு. நகைச்சுவை கலந்த காதல் கதை.
இக்கால பெண்களுக்கே உரிய ஸ்டைலிஷான கதை. இந்த ஆண்டின் 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது.
பொன்னியின் செல்வன்
இது இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. கல்கியின் நாவல் தான் இந்தப்படத்தின் வெற்றிக்குக் காரணம். மணிரத்னம் இயக்க, ஏ.ஆர்.ரகுமான் இசைக்க விக்ரம், ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
மணிரத்னம் ரொம்ப இம்ப்ரஸாக படத்தை எடுத்து இருக்கிறார். வந்தியத்தேவன், ஆதித்யகரிகாலன், நந்தினி ஆகிய கதாபாத்திரங்கள் கதைக்கு உயிரூட்டின. இதன் அடுத்த பாகத்தையும் அடுத்த வருடம் வருகிறது என்று எதிர்பார்ப்பை எகிறச் செய்துவிடுகிறார்கள்.
விக்ரம்
2022ல் ரசிகர்களின் ரசனையை எட்டுத்திக்கும் தெறிக்க விட்ட மாபெரும் வெற்றிச்சித்திரம். கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில், சூர்யா உள்பட பலர் நடித்துள்ளனர். கமலின் சொந்தப்படம். 420 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
டாப் 10 டைரக்டர்களில் லோகேஷ் கனகராஜ் தான் முதலிடம். படத்தின் வெற்றிக்கு அடுத்த காரணம் கமல், விஜய்சேதுபதி, சூர்யா, பகத்பாசில் கூட்டணி. திரைக்கதையின் விறுவிறுப்பு.
படத்தின் கலெக்ஷனும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அனிருத்தின் பிஜிஎம், மியூசிக் படத்திற்கு கூடுதல் பிளஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது. அதனால் படம் முதலிடத்தைப் பிடித்து வெற்றி வாகை சூடியுள்ளது.