தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை – போலிஸ் உதவுகிறதா ?

Published On: December 14, 2019
---Advertisement---

d449a1623ce4db4aeb764f8647ad9256

கடந்த சில தினங்களுக்கு முன்னர் லாட்டரி சீட்டு வாங்கி ஏமாந்ததால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்ட அருண் என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது.

அருண் என்பவர் லாட்டரி சீட்டுகள் வாங்கி ஏமாறுதல், தொழிலில் நஷ்டம், போன்ற காரணங்களால் தனது 3 மகள்கள் மற்றும் மனைவி குழந்தையோடு தற்கொலை செய்துகொண்ட வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை உருவாக்கியது. இந்நிலையில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் லாட்டரி விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகவும் அதனை அம்மாவட்ட போலீஸார் லஞ்சம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக 200வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் 155 நபர்களை லாட்டரி விற்பனைக்காகக் கைது செய்திருப்பதாகவும் காவல்துறை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனைக்கு உதவியாக இருந்த இரு காவலர்கள் மேல் நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் காவல்துறை சார்பில் சொல்லப்பட்டு வருகிறது.

அதேப்போல பக்கத்து மாவட்டமான கடலூரி 291 பேர் லாட்டரி விற்பனை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். போலிஸ் துணையின்றி இவ்வளவு பெரிய அளவில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யமுடியாது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Comment