மீண்டும் மாநில அரசை கடுப்பேற்றும் விஜய்சேதுபதி: பரபரப்பு தகவல்

8a2cebf407edb14e5b449d68bc07aa99

இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் ’லாபம்’ திரைப்படத்தில் விவசாயிகளுக்காக போராடும் ஒரு கேரக்டரில் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பல வசனங்கள் மத்திய மாநில அரசுகளை தாக்கும் வகையில் இருப்பதாகவும் இதனால் இந்த படம் வெளிவந்தவுடன் பெரும் பிரச்சனையை சந்திக்கும் என்றும் கூறபடுகிறது.

ஏற்கனவே இயக்குநர் எஸ்பி ஜனநாதன் பல புரட்சிகரமான கருத்துக்களை தனது படத்தில் வைப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஜய்சேதுபதி இந்த படத்தில் அரசுக்கு எதிரான வசனங்களை அதிகப்படுத்த கூறியதாகவும் இதனால் இந்த படத்தில் காரசாரமான வசனம் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. விஜய்யை அடுத்து விஜய் சேதுபதியும் தனது படங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து உள்ளதால் இந்த படமும் பிரச்சனையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Categories Uncategorized

Leave a Comment