ஜாக்கிரதையாக காதலியுங்கள்: காதலர் தினத்தில் அட்வைஸ் செய்த விஜய்சேதுபதி!

a6e8878bf068c5056618596ddebeb0bf-1

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவர் இந்த விழாவில் பேசும்போது நடிகர் போஸ் வெங்கட்டை தனக்கு மெட்டி ஒலி சீரியலில் இருந்தே தெரியும் என்றும் அவரை அப்போதிருந்தே தான் கவனித்து வருவதாகவும் தெரிவித்தார்

மேலும் கேவி ஆனந்த் இயக்கிய ’கவண்’படத்தில் நடித்தபோது போஸ் வெங்கட் அரசியல்வாதி கேரக்டரில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார் என்றும் அந்த படத்திற்கு வழுக்கை தலை உடைய ஒரு அரசியல்வாதி தேவை என்று கேவி ஆனந்த் கூறிய போது உடனே தன்னுடைய தலையை தலையின் முன் பகுதியை மழித்து கொண்டு கேவி ஆனந்த் முன்நின்று நடித்தி காட்டினார் என்றும் அந்த அளவுக்கு ஒரு கேரக்டருக்காக அவர் தியாகம் செய்யும் மனப்பான்மை உடையவர் என்றும் கூறினார் 

மேலும் ஒரு சிலரின் முகத்தை பார்த்தாலே அவர்கள் நல்லவரா கெட்டவரா என்று தெரிந்து விடும் என்றும் போஸ் வெங்கட்டின் முகத்தை பார்த்த உடனே அவர் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவர் என்பதை கண்டு கொண்டதாகவும் விஜய்சேதுபதி கூறினார் 

இறுதியாக ”அனைவரும் காதலியுங்கள் ஆனால் ஜாக்கிரதையுடன் காதலியுங்கள்”என்று ரசிகர்களுக்கு ஒரு சின்ன அட்வைஸ் கூறிவிட்டுத் தன்னுடைய உரையை முடித்துக்கொண்டார்

காதல் காதல் குறித்து வித்தியாசமான சிந்தனையுடன் போஸ் வெங்கட் இயக்கியுள்ள ’கன்னிமாடம்’ படத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு ஹரிசாய் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகர் ரோபோ சங்கர் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Categories Uncategorized

Leave a Comment