Cinema History
விஜய்யை பீட் செய்ய ஓயாமல் போராடிய சூர்யா!.. என்னவெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க!..
1997 ஆம் ஆண்டு விஜய், சூர்யா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “நேருக்கு நேர்”. சூர்யா அறிமுகமான முதல் திரைப்படம் இதுதான் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். சூர்யாவுக்கு இத்திரைப்படம் முதல் திரைப்படம் என்பதால் அவர் பல தயக்கங்களையும் அவமானங்களையும் சந்தித்தார் என்பதை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சூர்யா பகிர்ந்திருந்தார்.
எனினும் “நேருக்கு நேர்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் சூர்யா, விஜய்யை தனது போட்டியாளராக நினைத்துக்கொண்டு அவரை நேருக்கு நேராக மோதும் வகையில் பல செயல்களை செய்துள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதாவது “ஃப்ரண்ட்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட் லெவல் வேறு ஒரு தளத்திற்குச் சென்றதாம். அதனை தொடர்ந்து விஜய்யின் மார்க்கெட்டுக்கு நிகராக நமக்கும் மார்க்கெட் எகிறவேண்டும் என்பதற்காக விஜய்க்கு போட்டியாக சில திரைப்படங்களை வெளியிட்டாராம் சூர்யா.
விஜய்யின் “ஷாஜகான்” திரைப்படம் வெளியானபோது அத்திரைப்படத்துக்குப் போட்டியாக “ஸ்ரீ” திரைப்படத்தில் நடித்தாராம் சூர்யா. அதுவரை சாக்லேட் பாய் ஆக வலம் வந்த சூர்யா, “ஸ்ரீ” திரைப்படத்தில் ஆக்சன் ஹீரோவாக நடித்தார்.
ஆதலால் அத்திரைப்படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்திரைப்படம் சரியாக ஓடவில்லை. ஆனால் விஜய்யின் “ஷாஜகான்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக அமைந்தது. “ஸ்ரீ” திரைப்படத்தின் தோல்வியால் மிகவும் சோகமடைந்தாராம் சூர்யா.
இதையும் படிங்க:இது பேன் இந்தியா இல்ல… பேன் வேர்ல்டு… ஹாலிவுட் நடிகரை வைத்து எம்.ஜி.ஆர் தயாரித்த பிரம்மாண்ட திரைப்படம்…
இதனை தொடர்ந்து விஜய்யின் “வேலாயுதம்” திரைப்படத்திற்கு போட்டியாக “ஏழாம் அறிவு” திரைப்படத்தை வெளியிட்டாராம் சூர்யா. “ஏழாம் அறிவு” நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுத்ததால் அத்திரைப்படத்திற்கு பெரிதும் வரவேற்பு இருந்ததாம். மேலும் “ஏழாம் அறிவு” வெளியான முதல் மூன்று நாட்கள் நல்ல வரவேற்பு இருந்ததாம். ஆனால் அதன் பின் ரசிகர்களுக்கு அத்திரைப்படம் பிடிக்காமல் போய்விட்டதாம். இவ்வாறு அப்பேட்டியில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.