">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
தமிழ் நடிகருடன் காதலை முத்தம் கொடுத்து உறுதி செய்த விளையாட்டு வீராங்கனை
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த ஆண்டு தனது மனைவி ரஜனியை விவாகரத்து செய்த பின்னர் ஒரு சில நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார் ஆனால் அதெல்லாம் வதந்தி என்பதை உறுதி செய்த விஷ்ணுவிஷால், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது
ஜூவால கட்டாவுடன் காதல் என்ற செய்தியை விஷ்ணு விஷால் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷ்ணு விஷால் மற்றும் ஜூவால கட்டாஆகிய இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது இருவரது சமூக வலைதள பக்கங்களிலும் வெளியாகி வந்தன
இந்த நிலையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ஜுவாலா கட்டா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விஷ்ணு விஷாலுக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய காதலர் என்று குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து விஷாலை அவர் காதலிப்பது உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜூவால கட்டா ஏற்கனவே பேட்மிண்டன் வீரர் ஒருவரை திருமணம் செய்து அதன் பின்னர் விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
My valentine ❤️@TheVishnuVishal pic.twitter.com/fjHpSDHJn6
— Gutta Jwala (@Guttajwala) February 14, 2020