
கோவையில் ஒரு தலையாக பெண்ணைக் காதலித்து வந்த இளைஞர் அந்த பெண்ணின் அண்ணனைக் கொலை செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் எனும் ஆட்டோ ஓட்டுனர் தினேஷின் தங்கையை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். இது தெரிந்த தினேஷ் மணிகண்டனை பல முறையாக தனியே அழைத்துச் சென்று அறிவுரைக் கூறியுள்ளார்.
தினேஷும் மணிகண்டனும் உறவினர்கள்தான் என்றாலும் மணிகண்டனுக்கு சம்மந்தப்பட்ட பெண் தங்கை முறை வருவதாக சொல்லி தினேஷ் அவருக்கு அறிவுரை சொல்லியுள்ளார். ஆனால் பிடிவாதமாக மணிகண்டன் தினேஷுடன் வாக்குவாதம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தினேஷை குத்தியுள்ளார்.
இதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, போலீஸார் தலைமறைவான மணிகண்டனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவமானது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.