">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
காதலர் தினம் கொண்டாடலாம்… ஆனால் மனைவி பார்க்கும்படியாகவா ? –சிக்கிய கணவனின் நிலை !
பிஹார் மாநிலத்தில் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் ஆண் தன் கள்ளக்காதலியோடு காதலர் தினம் கொண்டாடியதை அடுத்து மனைவியிடம் சிக்கியுள்ளார்.
பிஹார் மாநிலத்தில் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் ஆண் தன் கள்ளக்காதலியோடு காதலர் தினம் கொண்டாடியதை அடுத்து மனைவியிடம் சிக்கியுள்ளார்.
உலகம் முழுவதும் நேற்று முன் தினம் காதலர் தினம் காதலர்களால் கொண்டாடப்பட்டது. காதலர்கள் தங்களுக்குள் பரிசளித்துக் கொண்டு அளித்து மகிழ்ந்திருந்த வேளையில் ஒரு நபர் மட்டும் காதலர் தினம் கொண்டாடி பொதுவெளியில் மனைவியிடம் சிக்கிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பீஹாரைச் சேர்ந்த அந்த நபருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால் இப்போது வேறு ஒரு பெண்ணுடன் அவர் பழகி வருவதாக அவர் மனைவி சந்தேகமடைந்துள்ளார். இதையடுத்து காதலர் தினத்தன்று வெளியே செல்வதாக சொல்லி அவர் செல்ல, அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார் மனைவி. அப்போது காதலியுடன் கணவன் மகிழ்ச்சியாக அவர்கள் இருவரையும் பொதுவெளியில் கையும் களவுமாக பிடித்த மனைவி கோபத்தில் கணவனைத் தாக்க ஆரம்பித்தார்.
இதனால் அந்த இடத்தில் பரபரப்பான சூழல் உருவாக, போலீஸார் கூடி அந்த பெண்ணை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் எந்த தீர்வும் ஏற்படாததால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க சொல்லி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர் போலிஸார்.