Connect with us
mgr

Cinema News

உங்க படத்தோட கதை என்னோடது!.. எம்ஜிஆருக்கே விபூதி அடிக்க பார்த்த நபர்…

மக்கள் திலகம் எம்.ஜி.ராமசந்திரன் இயக்கி, இரு வேடங்களில் நடித்து இயக்கி 1958ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாடோடி மன்னன். இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் அதிரடி சாகச திரைப்படமாக விளங்கியது. கருப்பு வெள்ளை மற்றும் கலர் ஆகிய இரண்டிலும் படமாக்கப்பட்டது.

நல்ல விமர்சனத்தை பெற்ற இப்படம் வணிகரீதியாகவும் வெற்றியடைந்து வெள்ளிவிழா படமாக அமைந்தது. மேலும் அக்காலகட்டதில் எம்.ஜி.ஆரின் சினிமா மற்றும் அரசியல் வாழ்க்கை இரண்டிலும் இப்படம் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

mudurai

mudurai

அப்போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது. படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு
எம்.ஜி.ஆருக்கு ஒரு பதிவு தபால் ஒன்று வந்துள்ளது. பதிவு தபால் என்பதால் எம்.ஜி.ஆரே அதை கையெழுத்திட்டு வாங்கினார். கவரை பிரித்து பார்க்க அதில் ஒரு வெற்று காகிதம் மட்டுமே இருந்துள்ளது. அதில் எதுவும் எழுதப்படவில்லை. எனவே, எம்.ஜி.ஆர் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறந்துவிட்டார். சில மாதங்களில் படப்பிடிப்பு முடிந்து படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்தது.

mgr

mgr

அச்சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு மற்றொறு வக்கீல் நோட்டீஸ் ஒன்று வந்துள்ளது. அதில், ”பல மாதங்களுக்கு முன்பு நான் பதிவு தபாலில் ‘நாடோடி மன்னன்’ கதையை அனுப்பியிருந்தேன். அதைத்தான் நீங்கள் அப்படியே படமாக எடுத்துவிட்டீர்கள். படத்தின் தலைப்பிலும் என் பெயர் வரவில்லை கதைக்கு சன்மானமும் தரவில்லை” என்று ஒருவர் நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிருந்தார்.

அதனைக் கண்டு அதிர்ச்சியான எம்.ஜி.ஆர் தனது வழக்கறிஞர் மூலம் இப்பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொண்டார், அதன்பிறகு தனக்கு தெரிந்தவர்களை தவிர வேறு யாரிடமிருந்து பதிவு தபால் வந்தாலும் அவர் கையெப்பமிட்டு வாங்குவதில்லையாம்.

இப்படி எம்.ஜிருக்கே டிமிக்கி கொடுக்க நினைத்திருக்கிறார் ஒரு நபர்.

இதையும் படிங்க: வசனம் எல்லாம் ஊருக்கு மட்டும்தானா?!.. நடிகர் விஜயை வச்சி செய்யும் நெட்டிசன்கள்..

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top