Cinema News
விஜய் அரசியலுக்கு வரணும்ன்னா இவ்வளவு கோடி செலவு செய்யனும்!! துள்ளியமாக கணக்கு போட்ட பிரபல பத்திரிக்கையாளர்…
விஜய் நடிப்பில் உருவான “வாரிசு” திரைப்படம் வருகிற பொங்கல் தினத்தை முன்னிட்டு 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே போல் “துணிவு” திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடையே கடும் விவாதங்கள் தொடங்கியுள்ளன.
விஜய் பல வருடங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை, விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதனை தொடர்ந்து விஜய் அரசியலுக்குள் நுழைவது குறித்து பேச்சுக்கள் ஆங்காங்கே எழுந்தன. எனினும் சமீபத்தில் இரண்டு முறை தனது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளார் விஜய். அச்சந்திப்பில் விஜய் அரசியலுக்குள் நுழைவது குறித்துதான் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சில தகவல்கள் தெரிவித்தன.
மேலும் சில நாட்களுக்கு முன்பு விஜய், ஒரு மூத்த அரசியல்வாதியை தனது வீட்டிற்கே அழைத்து பல மணி நேரம் தமிழக அரசியல் குறித்து விவாதம் நடத்தியதாகவும் ஒரு தகவல் கசிந்தது. இது போன்ற செய்திகளை வைத்து பார்க்கும்போது விஜய், விரைவில் அரசியலுக்கு வரக்கூடும் என பலரும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான மணி சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் என்றால் எவ்வளவு கோடிகள் செலவு செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு கருத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: இதுக்கு பின்னாடி இவ்வளவு அர்த்தம் இருக்கா?? “வாரிசு” டிரைலரை அக்குவேர் ஆணிவேராக டீகோட் செய்த பிரபலம்…
“2026-ல் விலைவாசி மிக உயரத்தில் இருக்கும். அந்த வருடத்திற்கான தேர்தலில் விஜய் 5000 கோடி செலவு செய்யவேண்டும். 5000 கோடியை யார் செலவு செய்ய முடியும்? விஜய்யிடம் 5000 கோடி ரூபாய் இருந்தாலுமே விஜய்யால் அதனை செலவு செய்யமுடியாது. ஏனென்றால் வருமான வரித்துறையும் ஒன்றிய அரசும் விஜய்யை தடுத்துவிடுவார்கள்.
5000 கோடி ரூபாய் செலவு செய்யக் கூடிய வல்லமை பெற்ற கட்சிகள் என்றால் அது திமுகவும், பாஜகவும்தான். 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 5000 கோடி செலவு செய்தால்தான் ஆட்சியை பிடிக்கமுடியும். விஜய்யிடம் 5000 கோடி முதலில் இருக்குமா என்பதே கேள்விதான். அப்படியே இருந்தாலும் எடுக்க விடுவாங்களா என்பதைத்தான் பார்க்கவேண்டும்” என அப்பேட்டியில் பத்திரிக்கையாளர் மணி கூறியுள்ளார்.