Cinema News
துணிவு’ படத்திற்கு போடப்பட்ட தடை!.. தணிக்கை குழு எடுத்த அதிரடியான முடிவு
வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களில் ரீலிஸ் தேதியை இரண்டு படங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தியேட்டர்கள் ஒதுக்கிடுதலில் இன்னும் குளறுபடியாக தான் இருக்கின்றன. இதுவரைக்கும் இரு தியேட்டர்களுக்கும் சமமான பங்கிடுகளை ஒதுக்குவதாக தான் கூறப்பட்டு வருகிறது.
ஆனால் தில்ராஜு எப்படியாவது வாரிசு படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளை கைப்பற்றுவதில் முயற்சி செய்து வருகிறார். இன்னும் ஒரு படி மேலாக துணிவு படம் நள்ளிரவு 1 மணி ஷோ என்று இருந்த நிலையில் வாரிசு பட ரிலீஸை அந்த நேரத்தில் கொண்டு வர வேண்டும் எனவும் முயற்சித்து வருகிறாராம்.
இதையும் படிங்க : வாரிசு Vs துணிவு : எத்தனை முறை அஜித்தும் விஜயும் மோதியுள்ளனர்?.. ரிசல்ட் என்ன?..
ஏனெனில் வாரிசு படத்தோடு டேபிள் பிராஃபிட்டே பல கோடிக்கு வியாபாரமாகி விட்டதால் அதை எப்படியாவது சரி செய்யவேண்டும் என்ற நோக்கில் தான் இந்த அளவு முயற்சி செய்து கொண்டு வருகிறார் என்று வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்தார்.
இந்த நிலையில் துணிவு படத்தின் ரிலீஸில் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. சௌதி அரேபியாவில் துணிவு படத்திற்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அந்த படத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்துக்கள் இருப்பதாக தெரியவரவே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அதுவும் சௌதி அரேபியா முழுவதும் முஸ்லீம்கள் வசிக்கும் நாடு என்பதால் இந்த படத்தில் அவர்கள் கொள்கைக்கு மாறான கருத்துக்கள் இருப்பதால் படத்திற்கு தடைவிதிக்கப்படலாம் என தெரிகிறதாம். நம் நாட்டில் எப்படி தணிக்கை குழு இருக்கிறதோ அதே மாதிரி சௌதியிலும் அந்த மாதிரி அமைப்பு ஒன்று இருக்கிறதாம். அவர்கள் தான் படத்தை பார்த்து இந்த மாதிரியான முடிவை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் கூடுதல் தகவல் என்னவெனில் திருநங்கைகளுக்கு எதிராகவும் சில கருத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்று தெரிகிறதாம்.