Cinema News
சிவாஜிக்கு பயந்து பின் வாசல் வழியாக ஓடிய விஜய்… அதுக்கப்புறம் நடந்ததுதான் ஹைலைட்…
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அசாத்தியமான நடிப்புத் திறமையை குறித்து நாம் தனியாக கூறத் தேவையே இல்லை. அந்த அளவுக்கு தனது நடிப்பாற்றலால் தமிழ் சினிமாவை கட்டிப்போட்டவர் சிவாஜி.
சிவாஜியின் நடிப்பாற்றலையும் தாண்டி அவரிடமிருந்து மற்ற நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உண்டு என அவருடன் பழகிய சினிமா பிரபலங்கள் பல பேட்டிகளில் கூறியுள்ளனர். அது என்ன என்றால், சொன்ன நேரத்திற்கு முன்பே பக்காவாக ரெடியாகி ஷூட்டிங்கிற்கு வந்துவிடுவதுதான்.
ஒரு முறை இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு பேட்டியில் கலந்துகொண்டிருந்தபோது “படையப்பா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நிகழ்வை குறித்து பகிர்ந்திருந்தார். அதாவது “படையப்பா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது சிவாஜிக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
அடுத்த நாள் படப்பிடிப்பில் சிவாஜிக்கு முதல் ஷாட். காலை 9 மணிக்கு படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என கே.எஸ்.ரவிக்குமார் கூற, “அதெல்லாம் வேண்டாம் 7 மணிக்கே வைத்துக்கொள்ளலாம்” என சிவாஜி கணேசன் கூறினாராம். அவர் சொன்னது போல் அடுத்த நாள் காலை 6 மணிக்கே செட்டிற்கு வந்துவிட்டாராம். இது போல் நேரம் சிறிதும் தவறாமல் சொன்ன நேரத்திற்கு முன்னதாகவே வந்துவிடுவாராம் சிவாஜி கணேசன்.
இந்த நிலையில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் “ஒன்ஸ் மோர்” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சம்பவம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, விஜய், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஓன்ஸ் மோர்”. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வீட்டில் நடந்துகொண்டிருந்தது. அப்படப்பிடிப்பு நடக்கும் வீட்டிற்கு விஜய்யும் எஸ்.ஏ.சியும் மிகவும் தாமதமாக வந்தார்களாம்.
இதையும் படிங்க: “இன்னும் கொஞ்ச நாள்ல லவ் டூடே படத்தை மறந்திடுவாங்க..” என்ன சார் சொல்றீங்க?? சுசீந்திரன் ஓபன் டாக்…
அப்போது சிவாஜி கணேசன் இவர்களுக்கு முன்னமே மேக்கப் எல்லாம் போட்டுக்கொண்டு தயாராக இருந்தாராம். அந்த வீட்டின் கேட்டுக்குள் நுழைந்தவுடன் சிவாஜியை பார்த்த இருவரும், காரை அப்படியே நிறுத்திவிட்டு சிவாஜிக்கு தெரியாமல் பின் வாசல் வழியாக அந்த வீட்டிற்குச் சென்றார்களாம். அங்கே விஜய்க்கு மேக்கப் போடச்சொல்லிவிட்டு சிவாஜியை பார்க்க வந்தாராம் எஸ்.ஏ.சி. அப்போது சிவாஜி கணேசன் “பின் வாசல் வழியா வந்தா தெரியாதுன்னு நினைச்சிட்டியா?” என கேட்டுவிட்டு சிரித்தாராம்.