கருப்பு வெள்ளை காலம் முதல் கலர் சினிமா வரை நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நடிகர் அசோகன். எம்.ஜி.ஆர், சிவாஜியுடன் அதிக படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆருக்கு நல்ல நண்பராக இருந்தவர். இவர் திருச்சியை சேர்ந்தவர். அந்தோணி என்கிற இவரின் பெயர் சினிமாவுக்காக அசோகன் என மாற்றப்பட்டது.
வசனத்தை இழுத்து இழுத்து பேசும் அசோகனின் ஸ்டைல் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். ஹீரோ, ஹீரோவின் நண்பன், குணச்சித்திர வேடம், கதாநாயகியின் அப்பா என பல கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவருக்கு திருமணம் நடந்தது ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஆகும்.

கோவையை சேர்ந்த பிராமண பெண் சரஸ்வதியை காதலித்தார் அசோகன். ஆனால், அவரின் காதலை அந்த பெண்ணின் பெற்றோர் ஏற்கவிலை. மேலும், எங்கள் மகளை இனிமேல் நீ சந்தித்தால் காவல்நிலையத்தில் புகார் செய்வோம் என மிரட்டியுள்ளனர். எனவே, வீட்டை விட்டு வெளியேறி அசோகனை திருமணம் செய்து கொள்வது அந்த பெண் முடிவெடுத்தார். அதன்படி, அவரை சென்னைக்கு அழைத்து விட்டார் அசோகன்.

மேலும், எம்.ஜி.ஆருக்கும் தகவல் கொடுத்தார். மகிழ்ச்சியடைந்த எம்.ஜி.ஆர் திருமண வேலைகளை செய்தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்தில் நண்பர்கள் சூழ, கதவுகள் மூடப்பட்டு அசோகனின் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக சரஸ்வதியின் பெயர் மேரி ஞானம் என மாற்றப்பட்டு கிறிஸ்துவ முறைப்படி அவர்களின் திருமணம் நடந்தது.
எம்.ஜி.ஆருடன் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அசோகன் நடித்துள்ளார். மேலும். எம்.ஜி.ஆரை வைத்து ‘நேற்று இன்று நாளை’ என்கிற படத்தையும் அவர் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்த ஒன்னுக்கே உசுரு போகுது!.. பிக் சைஸ் மனச காட்டி மூடேத்தும் சஞ்சனா…
