நான் வாயத் தொறந்தா அவனவன் நாண்டுகிட்டு செத்துடுவான்– மன்சூர் அலிகான் சர்ச்சைப் பேச்சு !

5697a25ac6bca505b0a1c09a6bf35429

நாம் தமிழர் கட்சி சார்பில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மன்சூர் அலிகான் சர்ச்சையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

வண்னாரப்பேட்டையில் இஸ்லாமிய மக்கள் நடத்திய போராட்டத்தின் போலிசார் உள்புகுந்து அவர்களைத் தாக்கியது அரசியல் களத்தில் அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு அனைத்துக் கட்சிகளும் கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த கூட்டத்தில் அக்கட்சியின் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் ‘மன்சூரலிகான் வாயை திறந்தாலே, எப்ஐஆர் போட்டுட்டு 10 பேர் வெளியே ரெடியா நிப்பாங்க. ஆனா அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் கிடையாது. மக்கள் போராட்டத்துல நான் உள்ள புகுந்து எதும் பிரச்சனை ஆகிடக்கூடாதுன்னு பாக்குறேன். இல்லாட்டி நான் வாயை தொறந்தேன்னு வெச்சுக்குங்க, அவனவன் நாண்டுக்கிட்டு செத்துப்போயிடுவான்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Categories Uncategorized

Leave a Comment