Connect with us

Cinema History

சினிமாப் பாடல் பாடணும்னு ஆசையே இல்லாதவர்…பாடியதோ 5000க்கும் மேற்பட்ட பாடல்கள்…!

மனதை மயக்கச் செய்யும் குரல் என்றால் அனைவரையும் வசீகரிக்கத் தான் செய்யும். பெரும்பாலான பாடகியர்கள் இந்தக் குரலுக்குச் சொந்தக்காரியாக இருந்தாலும் அனுராதா ஸ்ரீராமின் குரல் இன்றும் காந்தத்தைக் கொண்டுள்ளது. இவர் கடந்து வந்த பாதையைப் பற்றி ரத்தின சுருக்கமாகப் பார்ப்போம்.

Anuratha sriram2

சினிமாப் பாடல்கள் பாடணும்கற ஆசை இல்லாமல் இருந்த இவர் தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், வங்காளம், இந்தின்னு இதுவரை 12….13 மொழிகளில் 5000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். நிறைய ரியாலிட்டி ஷோக்களில் வருவார். சூப்பர் சிங்கரில் இவர் ஒரு ஜட்ஜாக இருந்து கலக்குகிறார்.

அன்பு, அறிவு நிறைந்த பாடகி இவர் தான். சினிமாப் பாடல்களைப் பாடக்கூடாது என்று இருந்தப்ப இளையராஜாவின் பாடல்களை நிறைய கேட்டுக்கிட்டே இருந்து அதே மாதிரி பாடிப் பார்ப்பாங்களாம். பம்பாய் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் தான் இவருக்கு முதலில் கோரஸில் பாட வாய்ப்பு கொடுத்தார்.

முதலில் பயந்த அனுராதா அதன்பிறகு ரகுமானின் உற்சாகத்தால் சரியாகப் பாடினார். அதன்பிறகு தேவா, வித்யாசாகர் இசையில் பாடியுள்ளார். அதிகமாக பாடியது தேவாவின் இசையில் தான். இவரும் இவரது கணவரும் ரொம்ப ஒற்றுமையா இருந்து கிட்டத்தட்ட 2500 பாடல்களைப் பாடியுள்ளனர்.

Anuratha and her husband Sriram

கலைமாமணி விருது, பிலிம்பேர் விருது வாங்கியுள்ளார். சத்யபாமா பல்கலை. இவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தது. 1000 பக்திப் பாடல்கள், 10 ரியாலிட்டி ஷோ என கலக்கி வருகிறார்.

நிலவைக் கொண்டுவா, அன்பென்ற மழையிலே, கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு…ஆகிய பாடல்கள் இவர் பாடியது தான். எனி டைம் கேட்டாலும் சூப்பர்ஹிட்டானவை தான் இந்தப் பாடல்கள்.

9.7.1970ல் சென்னையில் உள்ள கே.கே.நகரில் பிறந்தார். தந்தை மீனாட்சி சுந்தரம் மோகன்ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வேலை பார்த்தார். இவரது அம்மாவின் பெயர் ரேணுகாதேவி. இவரும் பாடகி தான். 400 பாடல்கள் வரை பாடியுள்ளார்.

அனுராதா ஸ்ரீராம் பி.ஏ., எம்.ஏ. மியூசிக் படிப்பை சென்னை குயின்மேரிஸ் கல்லூரியில் படித்து முடித்தார். அதுமட்டுமல்லாமல் இந்தப் படிப்புகளில் இவர் கோல்டு மெடலும் வாங்கியுள்ளார்.

அனுராதாவுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி மாதிரி வரணும்னு ஆசை. இவரது அம்மாவுக்கு கிளாசிக்கல் நடனம் கற்றுத்தர வேண்டும் என்று ஒரு ஆசை. அதனால் தஞ்சாவூரில் உள்ள எஸ்.ஏ.கல்யாணராமனிடம் 6 வயசு இருக்கும்போது சேர்த்து விட்டார்.

அதே போல இவருக்கு ரொம்ப ஆதரவு கொடுக்குற கணவராகக் கிடைத்துள்ளனர். கோவையில் உள்ள ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் முதலில் இருவரும் படித்தனர். சென்னை குயின்ஸ் மேரியில் யுஜி படித்துள்ளார்.

Ranji and Anuratha sriram

தன் கணவருடன் சேர்ந்து 5 ஸ்டார் படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஆசை படத்தில் மீனம்மா..பாடலை இவர் தான் பாடியுள்ளார். என்ன ஒரு ரம்மியமான குரல்…யார் இவ்ளோ அழகா பாடினார்னு நம்மைக் கேட்கத் தூண்டும்.

1980ல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐ.வி.சசியின் இயக்கத்தில் வெளியான காளி என்ற படத்தில் பாடகி அனுராதா ஸ்ரீராம் அவருடைய மகளாக நடித்து அசத்தியுள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினியுடன் சீமா, படாபட் ஜெயலட்சுமி, சுபா, கைகலா சத்யநாராயணா உள்பட பலர் நடித்துள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top