ஷாலினியின் ஜாதகத்துல இப்படி இருக்கு!.. அஜித்தை அடுத்த நிலைக்கு அழைத்துக் கொண்டு போகும் ஷாலுமா!..

Published on: January 12, 2023
ajith
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவரின் நடிப்பில் துணிவு படம் வெளியாகி சக்க போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. படமு முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை பறக்க விட்டிருக்கிறார் படத்தின் இயக்குனர். அதில் பந்தாடியிருக்கிறார் அஜித்.

ajith1
ajith1

இதுவரை பார்த்திருராத ஒரு வித்தியாசமான ஸ்டைலிஷான லுக்கில் அஜித் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்தியிருக்கிறார். ஒரு பக்கம் ரசிகர்களின் கொண்டாட்டம், மேளதாளங்கள் என துணிவு பொங்கலை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார் அஜித்.

இதையும் படிங்க : “பேன் இந்தியால இந்த நல்ல படமெல்லாம் பார்க்கமுடியாது”… இவ்வளவு கோபத்தை அமீர் எங்க வச்சிருந்தாரோ??

எந்த ஒரு ரசிகர் மன்றமும் இல்லாமல் ரசிகர்களின் நலனுக்காகவே பொது மேடைகளில் கலந்து கொள்வதை தவிர்த்தும் வருகிறார். வித்தியாசமான சிந்தனை உள்ளவராகவே திகழ்ந்து வருகிறார். இதற்கேற்றாற் போல அஜித்தான் அடுத்த முதல்வர் என்றெல்லாம் பல பத்திரிக்கைகளில் பிரபலங்கள் பலர் அன்றே பேட்டியில் கூறியிருந்தனர்.

ajith2
ajith2

இதற்கு ஒரே காரணம், கலைஞரை ஒரு பொதுமேடையில் அவருக்கு எதிரான கருத்துக்களை பேசியதனால் தான். அதிலிருந்தே எதிர்கட்சியை சார்ந்த பலரும் அப்பவே அஜித்தை வளைத்துப் போட நினைத்தார்கள். ஏன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அன்பிற்கினிய நடிகராகவே மாறினார் அஜித்..

ajith3
sv sekar

இந்த நிலையில் திரைப்பட நடிகர் எஸ்.வி.சேகரும் ஒரு பேட்டியில் தமிழ் நாட்டின் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்தான் முதல்வராக இருக்கப்போகிறார் , அஜித்தின் ஜாதகத்தில் இருக்கிறதோ இல்லையோ ஆனால் ஷாலினியின் ஜாதகப்படி நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.