அவர் சொன்ன ஒரு வார்த்தை!. கடைசிவரை கடைபிடித்த எம்.ஜி.ஆர்.. இதுதான் காரணம்!..

Published on: January 13, 2023
mgr
---Advertisement---

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் 18 வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கினார். பல நாடக கம்பெனிகளில் மாத சம்பளத்திற்கு அவர் பணிபுரிந்துள்ளார். எனவே, இவருக்கு பல முதலாளிகள் இருந்துள்ளனர். நாடகங்களில் நடித்துக்கொண்டே சினிமாவில் நுழைய வாய்ப்பு தேடி வந்த காலம் அது. அப்போது திரையுலக ஜாம்பவானக இருந்தவர் மன்னார்குடி எம்.ஜி.நடராஜ பிள்ளை.

1938ம் ஆண்டு நடராஜ பிள்ளை ‘தட்சயக்ஞம்’ என்கிற திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருந்தார். இப்படத்தில் தட்சன் எனும் வேடத்திலும் அவர் நடித்தார். இப்படத்திற்கு முன்பு சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த எம்.ஜி.ஆர், இந்த படத்தில் எதாவது நல்ல வேடத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு நடராஜபிள்ளையை மன்னார்குடியில் சந்தித்து வாய்ப்பு கேட்டார். எனவே, அப்படத்தில் பரமசிவன் வேடம் கிடைத்தது.

mgr
mgr

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கைலாய காட்சியின் படப்பிடிப்பு மார்கழி மாதம் கடுமையான பனியில் நடந்தது. எம்.ஜி.ஆர் சிவனாகவும், நடராஜபிள்ளை தட்சனாகவும் நடித்துக் கொண்டிருந்தனர். நடராஜ பிள்ளைக்கு ஆஸ்துமா பிரச்சனை உண்டு. எனவே, பணி ஒத்துக்கொள்ளாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அப்போது அவரை கான எம்.ஜி.ஆர். மருத்துவமனைக்கு சென்றிருந்தார். மருத்துவர்கள் நடராஜபிள்ளையிடம் ‘கொஞ்சம் பிராந்தி அருந்தினால் மூச்சித்திணறல் குறையும்’ எனக்கூறினர். ஆனால், அவர் அதை மறுத்துவிட்டார். அவரிடம் எம்.ஜி.ஆர் ‘ பிராந்தியை மருந்து என நினைத்து கொஞ்சம் அருந்தலாமே. அதை ஏன் மதுவாக நினைக்கிறீர்கள்?’ என கேட்டுள்ளார்.

mgr
mgr

அதற்கு நடராஜ பிள்ளை ‘ராமச்சந்திரா நான் காந்திய வழியில் கதர்ச்சட்டை அணிபவன். அது மருந்தாக இருந்தாலும் மதுவை நான் அருந்த மாட்டேன்’ எனக்கூறியதோடு, எம்.ஜி.ஆரின் கையை பிடித்து ‘நீயும் உன் வாழ்நாளில் புகை பிடிக்கவோ, மது அருந்தவோ கூடாது. இது என் மேல் ஆணை’ என கேட்டுக்கொண்டாராம். எம்.ஜி.ஆருக்கு அதுவே வேதவாக்காக மாறி வாழ்நாள் வரை புகைப்பிடிக்கவும் இல்லை, மது அருந்தவும் இலை.

சொந்த வாழ்க்கையில் மட்டுமில்லாமல் எம்.ஜி.ஆர் தான் நடிக்கும் திரைப்படங்களிலும் அவர் புகைபிடிப்பது போலவோ, மது அருந்துவது போலவோ காட்சியை வைக்கமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நயன்தாரா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா?? இது தெரியாம போச்சே!!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.