Cinema History
வாங்க மோதி பாப்போம்!.. சவால் விட்ட சிவாஜி.. கூலா பதில் சொன்ன எம்.ஜி.ஆர்…
திரையுலகில் போட்டி என்பது எப்போதும் சகஜமான ஒன்றுதான். கருப்பு வெள்ளை காலம் முதல் இப்போதுவரை இந்த போட்டி தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. நேரில் சந்திக்கும் போது நண்பர்களாக இருப்பது போல் சிரித்தபடி கட்டித்தழுவி கொள்வார்கள். ஆனால், எப்போது குழி பறிக்கலாம் என காத்திருப்பார்கள். அல்லது முன்னே விட்டு பின்னால் திட்டுவார்கள். இது திரைத்துறையில் சகஜம்தான்.
எம்.ஜி.ஆர் – சிவாஜிக்கு கூட இந்த போட்டி இருந்துள்ளது. ஆனால், எம்.ஜி.ஆர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தவர் சிவாஜி. அவரை அண்ணன் என்றே அழைப்பார். எம்.ஜி.ஆர் முன்பு சிகரெட் கூட குடிக்க மாட்டார். அதேபோல், ‘சிவாஜி சிறந்த நடிகர்.. அவரைப்போல் என்னால் நடிக்க முடியாது.. அவர் பாணி வேறு.. என் பாணி வேறு’ என எல்லோரிடமும் எம்.ஜி.ஆர் சொல்வார்.
ஆனால், அரசியல் என வரும்போது ஒருவரை ஒருவர் தாக்கி பேசித்தானே ஆக வேண்டும். இது இருவருக்கும் நடந்தது. சிவாஜி காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டவர். எம்.ஜி.ஆரோ திராவிட சித்தாந்தத்தில் ஆர்வம் கொண்டவர். அதனால்தான் அண்ணாவை ஆதரித்து தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். அதன்பின், கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதிமுக கட்சி துவங்கியது தனிக்கதை.
சரி விஷயத்திற்கு வருவோம். இப்படி அரசியலில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் வெவ்வேறு கட்சிகளில் இருந்த போது ஒரு அரசியல் மேடையில் பேசிய சிவாஜி எம்.ஜி.ஆருக்கு சவால் விடும்படி ‘நடிப்பிலா?.. இல்லை வீரத்திலா?.. வாங்க மோதி பாப்போம்’.. எனப்பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய எம்.ஜி.ஆர் ‘தம்பி கணேசன் எனக்கு சவால் விட்டுள்ளார். நடிப்பிலா? என்று கேட்கிறார். ‘எல்லோருக்கும் தெரியும்! அவர் பாணி வேறு.. என் பாணி வேறு.. அவர் நடித்த சிவந்த மண் படத்தில் அவரை விட முத்துராமன் நன்றாக நடித்திருப்பதாக எல்லோரும் பேசுகிறார்கள். அதனால், அவருக்கு தன் நடிப்பின் மீதே சந்தேகம் வந்துவிட்டதா?’.. என ஒரு போடு போட்டார். அதன்பின் சிறிது கேப் விட்டு ‘வீரத்திலா’ என்று கேட்கிறார்.. ‘ஐயோ பாவம்’ என்றார். அவ்வளவுதான் கூட்டத்தில் சிரிப்பலையும், விசில் சத்தமும் விண்ணை பிளந்தது. ஏனெனில், அவரது படங்கள் மூலம் வீரமென்றால் எம்.ஜி.ஆர்தான் வெற்றி பெறுவார் என்கிற எண்ணம் பொதுமக்களுக்கு இருந்தது.
அதேநேரம், அரசியலுக்காக இருவரும் அப்படி பேசிக்கொண்டாலும் கடைசிவரை ஒருவர் மீது மற்றொருவர் மதிப்பு வைத்திருந்தவர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பிரகாஷ்ராஜை கைது செய்த போலீஸார்!.. காரணமாக இருந்த கமல்ஹாசன்.. செல்லம் இப்படியெல்லாம் இருந்திருக்காரா?..