எம்ஜிஆருக்காக கலைஞரையே எதிர்த்த சிவாஜி!.. நட்புக்கு உதாரணமாக இருந்த ஒரு நிகழ்வு!..

Published on: January 14, 2023
sivaji
---Advertisement---

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக வளர்ந்து விட்டால் அந்த நடிகருக்கு போட்டி யாரோ அவரை உதாசினப்படுத்தும் பல சம்பவங்கள் தொடர்ந்து  நிகழ்ந்து கொண்டே வருவது ஆண்டாண்டு காலமாக நடந்து வரும் நிகழ்வாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக ரசிகர்கள் செய்யும் அலப்பறைகள்  தாங்க முடியாது.

இது இன்று மட்டுமில்லை, 40களில் இருந்தே நடந்து கொண்டே வருகிறது. எம்ஜிஆர் சிவாஜி ஒரு  காலத்தில் கொடிகட்டி பறக்க ஆரம்பித்ததுமே அவர்களுக்குண்டான ரசிகர்கள் எங்கள் தலைவரை போல உண்டா என மாறி மாறி போட்டிப் போட்டுக் கொண்டும் சண்டையிட்டுக் கொண்டும் வருகின்றனர். அன்றிலிருந்து தொடங்கி அஜித்-விஜய் வரை நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

sivaji1
sivaji1 kalaignar

ஆனால் நடிகர்களுக்குள் எந்த போட்டியோ பொறாமையோ எதுவும் இல்லை. சொந்த வாழ்க்கையில் அவர்கள் ஒரு நல்ல நண்பர்களாகத்தான் இருந்து வருகிறார்கள். அப்படித்தான் சிவாஜியும் எம்ஜிஆரும் இருந்து வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் படங்கள் சிவாஜியின் படங்களி பிரீமியர் ஷோ என்றால் இரு குடும்பத்தாரும் போய் பார்ப்பதும் உண்டாம்.

இதையும் படிங்க : டபுள் பாசிட்டிவ் என்றால் என்ன?? இப்படி ஒரு வார்த்தையை நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா??

இப்படி நெருங்கி ஒரு உறவினர்கள் போலத்தான் இருந்திருக்கின்றனர். இதற்கு ஒரு தக்க உதாரணமாக எம்ஜிஆரின் நடிப்பில் வெளிவந்த ‘உலகம் சுற்றும் வாலிபன் ’ திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்திருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசு அதாவது திமுக அரசு படம் வெளியிடுவதை தடுத்து வந்தனராம்.

sivaji2
mgr kalaignar

தியேட்டர்கள் கொடுக்கக் கூடாது என்றும் கூறிவந்திருக்கின்றனர். அதனால் எம்ஜிஆர் பெரிதும் துன்பப்பட்டார். அப்போது சிவாஜி தாமாகவே முன்வந்துஎம்ஜிஆரிடம் அண்ணே! யார் கொடுக்கலைனாலும் பரவாயில்லை, என் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், நான் தருகிறேன் என்று கூறினாராம் சிவாஜி.

ஆனால் எம்ஜிஆரோ இப்படி செய்தால் பெரிய பிரச்சினை செய்து விடுவார்கள், அதுவும் அன்றைய அரசால் சிவாஜிக்கு ஏதாவது கஷ்டம் வந்துவிடும் என்று யோசித்தாராம். எப்படியோ படம் வெளியாகும் போது அதன் பிரீமியர் ஷோவை சிவாஜி கணேசன் தியேட்டரில் தான் போட்டிருக்கிறார் எம்ஜிஆர். அப்போது சிவாஜியை தவிர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து படத்தை பார்த்தனராம். இந்த  தகவலை இதயக்கனி விஜயன் அவரது பேட்டியில் கூறினார்.

sivaji3
mgr

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.