Connect with us
mgr

Cinema News

தொப்பி அணியும் பழக்கம் எம்.ஜி.ஆருக்கு எப்படி வந்தது தெரியுமா?.. ஒரு சுவாரஸ்ய தகவல்..

திரையுலகில் முடிசூடா மன்னனாக இருந்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். நாடக நடிகர், சினிமா நடிகர், அர்சியல்வதி, முதல்வர் என வாழ்க்கையில் உச்சங்களை தொட்டவர். மக்கள் சோகமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பார்த்து அழுது வடிந்து கொண்டிருந்த காலத்தில் ஆக்‌ஷன் படங்களை எடுத்து டிரெண்டை மாற்றியவர்.

கருப்பு வெள்ளை முதல் கலர் சினிமாவரை சினிமாவை ஆண்டவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் என்றாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது தலையில் தொப்பி அணிந்திருப்பார் என்பதுதான்.

mgr

mgr

அடிமைப்பெண் படத்தின் படபிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்ற போது படப்பிடிப்பை காணவந்த அவரின் நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆருக்கு புஸ்குல்லா எனும் வெள்ளை தொப்பியை கொடுத்தார். வெயிலுக்காக அதை அணிந்தார் எம்.ஜி.ஆர். அப்போது அவரின் தோற்றத்தை பார்த்த படப்பிடிப்பு குழுவினர் ‘இந்த தொப்பி அணிந்ததும் உங்களுக்கு 10 வயது குறைந்து விட்டது. மிகவும் இளமையாக இருக்கிறீர்கள்’ எனக்கூறினார்.

mgr

எனவே, தேர்தல் பிரச்சாரத்திலும் அதையே அணிய துவங்கி பின்னர் அதுவே அவருக்கு பழக்கமாகி அதுவே அவரின் அடையாளமாகவும் மாறியது. ஒருகட்டத்தில் தொப்பி அணியாமல் எம்.ஜி.ஆர் வெளியே வருவதில்லை. தன் இறுதிநாள் வரை அவர் தொப்பி அணிந்து வந்தார்.

உண்மையில் சிறு வயது முதலே எம்.ஜி.ஆருக்கு விதவிதமான தொப்பிகள் மீது ஆர்வமிருந்தது. அதனால்தான் அவர் சினிமாவில் நடிக்கும்போது விதவிதமான தொப்பிகளை அணிந்து தன்னை இளமையாக காட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரசிகர்களை அதிகமாக மதிக்கிற நடிகர்கள் இவர்கள்தான்?? அப்படி யாராவது இருக்காங்களா!!

Continue Reading

More in Cinema News

To Top