">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தேதி அறிவிப்பு – நீதிமன்றம் அதிரடி
நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
�
நிர்பயா கற்பழிப்பு கொலை வழக்கு நாட்டையை உலுக்கிய ஒன்றாகும். 2012ம் ஆண்டு டெல்லி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், ராம்சிங் என்பவன் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டான். சிறுவன் ஒருவன் 3 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்டான். மீதமிருந்த 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மாதம் 22ம் தேதி அவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றபப்டும் என அறிவிக்கப்பட்டது. அதன்பின் பிப்ரவரி 1ம் தேதி மாற்றப்பட்டது.
இந்நிலையில், அந்த 4 பேரும் தனித்தனியே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். எனவே, வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி வருகிற மார்ச் மாதம் 3ம் தேதி காலை 7 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, எந்த மாற்றமும் இல்லாமல் அவர்களுக்கு இந்த முறை தண்டனை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.