இளையராஜாவின் மார்க்கெட்டை பார்த்து ஒதுங்கினாரா கங்கை அமரன்?? இப்படி பண்ணதுக்கு என்ன காரணமா இருக்கும்??

Published on: January 18, 2023
Gangai Amaran and Ilaiyaraaja
---Advertisement---

இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் “கோழிக் கூவுது”, “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “கரகாட்டக்காரன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் “சுவரில்லா சித்திரங்கள்”, “வாழ்வே மாயம்”, போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்தும் உள்ளார். எனினும் கங்கை அமரன் இயக்கிய பல திரைப்படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார்.

Gangai Amaran and Ilaiyaraaja
Gangai Amaran and Ilaiyaraaja

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லட்சுமணனிடம் , “கங்கை அமரன் பல திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், தான் இயக்கிய திரைப்படங்களுக்கு மட்டும் ஏன் இசையமைக்காமல், இளையராஜாவை பயன்படுத்தினார்?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன், “கங்கை அமரன் இயக்குனராக அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே மிகப் பெரிய செல்வாக்குப் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்தார் இளையராஜா. ஒரு படத்தில் இளையராஜா என்ற பெயர் இருந்தாலே போதும், அந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் ஓடோடி வருவார்கள்” என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: பெண் இயக்குனரின் மனதை காயப்படுத்திய எம்.ஜி.ஆர்… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது??

Gangai Amaran and Ilaiyaraaja
Gangai Amaran and Ilaiyaraaja

மேலும் பேசிய அவர் “அதே போல் திரைப்படத்தில் இளையராஜா என்ற பெயர் இருந்தாலே போதும், ரசிகர்கள் திரையரங்கத்திற்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலை அப்போது இருந்தது. அதன் காரணமாகத்தான் கங்கை அமரன் தான் இயக்கிய திரைப்படங்கள் எல்லாவற்றிற்கும் இளையராஜாவை பயன்படுத்திக்கொண்டார். அப்படிப்பட்ட மிக செல்வாக்கான ஒரு இசையமைப்பாளராக தனது சொந்த அண்ணன் இருக்கும்போது அவரை விட்டுவிட்டு ஏன் கங்கை அமரன் இசையமைக்கப்போகிறார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.