Connect with us
soori

Cinema News

அவமானப்படுத்திய ஹவுஸ் ஓனர்!.. வளர்ந்த பின் நடிகர் சூரி என்ன செய்தார் தெரியுமா?…

ஒருவர் கீழ்மட்ட நிலையில் இருக்கும் போது பல அவமானங்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவமானங்களையும் தாண்டி நம்பிக்கையுடன் போராடினால்தான் வெற்றி கிடைக்கும். அதுவும் சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்காமல் போராடும் போது பல இடங்களில் அவமானப்பட வேண்டியிருக்கும். சினிமாவில் வெற்றி பெற்ற எல்லாருமே அவமானங்களை சந்திக்காமல் வந்திருக்க முடியாது.

இதில் நடிகர் சூரியும் ஒருவர். காமெடி நடிகர்களில் ஒருவராக கூட்டத்தில் நடித்த சூரி சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் போட்டி போட்டு பரோட்டா சாப்பிடும் நபராக ரசிகர்களை சிரிக்க வைத்தார். எனவே, பரோட்டோ சூரி என்கிற பெயர் அவருக்கு நிலைத்துப்போனது.

soori2

soori2

அதன்பின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. தற்போது மேலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். சினிமாவில் நடிப்பது மட்டுமில்லமால் மதுரையில் ஹோட்டல் தொழிலையும் சூரி செய்து வருகிறார். அதுதான் அவரின் குடும்ப தொழிலும் கூட.

soori_main_cine

soori

இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த நாட்களில் சென்னையில் இவர் குடியிருந்த வீட்டின் மாடியில் நிறைய மரங்கள் இருக்குமாம். ஒருமுறை அவரின் மகளை அந்த மரங்களின் முன்பு நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அதைப்பார்த்த அவர் குடியிருக்கும் வீட்டின் சொந்தகார பெண் சூரியை ரொம்பவே திட்டிவிட்டாராம். இதனால் அவமானமடைந்த சூரி அந்த வீட்டிலிருந்து வெளியேறி வேறு வீட்டில் குடியேறியுள்ளார்.

அதன்பின் சூரி வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் அவர் குடியிருந்த வீட்டின் அருகே ஒரு பிளாட் விற்பனைக்கு வருவதாக அவரின் மனைவி அவரிடம் கூற ‘கஷ்ட நஷ்ட பட்டாவது அந்த இடத்த வாங்கலாம். அட்வான்ஸ் கொடுத்திடு. அவமானப்பட்ட இடத்தில மரியாதையாய் போய் உட்காரணும்’ என சொன்னாராம்.

இதையும் படிங்க: ஐயோ இப்படி காட்டினா ஹார்ட் பீட்டு எகிறுமே!… தூக்கத்தை கெடுக்கும் நடிகை சமந்தா…

Continue Reading

More in Cinema News

To Top