
இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பாஸ்கர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது தொழிலதிபர் மீது நடிகை அமலாபால் கொடுத்த புகாரை விசாரிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
தொழிலதிபர் அழகேசன் கொட்டிவாக்கம் பகுதியில் டான்ஸ் ஸ்கூல் நடத்தி வருகிறார் என்பதும், அங்கு டான்ஸ் ரிகர்சலுக்காக வந்த நடிகை அமலாபாலிடம் பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் அழகேசன் பேசியதாகவும் அமலாபால் புகார் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.