விஜய் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான எஸ்.ஏ.சி!!.. பின்னனியில் இருக்கும் ரஜினியின் ஆன்மீகம்.. இது என்ன புதுக்கதையா இருக்கு?..

Published on: January 20, 2023
rajini
---Advertisement---

புரட்சி இயக்குனராக தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் இயக்குனர் எஸ்.ஏ.சி. இவரின் இயக்கத்தில் புரட்சிக்கரமான படங்கள் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் தாக்கத்தை எல்லாம் ஏற்படுத்தி விட்டு போயிருக்கின்றது.

rajini1
rajini vijay

சட்டம் ஒரு இருட்டறை , நெஞ்சிலே துணிவிருந்தால், நீதி பிழைத்தது, சாட்சி, போன்ற பல படங்கள் எழுச்சிகரமான வசனங்களுடன் வெளியாகி ஒரு புரட்சியை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியிருக்கிறது என்றே சொல்லலாம். மேலும் சட்டம் பற்றிய கருத்துக்களை துணிச்சலாக தன் படங்களில் வசனங்களாக வைப்பதில் வல்லவர் எஸ்.ஏ.சி.

இதையும் படிங்க : தமிழின் டாப் பாடலாசிரியரை பொது மேடையில் பளார் என அறைந்த பாடகர்… என்ன இருந்தாலும் இப்படியா??

கூடவே கொஞ்சம் கோபக்காரரும் கூட. செட்டில் அத்தனை டெக்னீசியன்கள் மீதும் அதிகளவு கோபத்தை வெளிப்படுத்துபவர். ஒரு சமயம் நடிகர் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எஸ்.ஏ.சி தன் கோபத்தை பற்றி கூறியிருக்கிறார். நிறைய கோபம் வருகிறது, எல்லார் மீதும் கோபம் வருகிறது என்று சொல்லியிருக்கிறார்.

rajini2
rajini2

அதற்கு ரஜினி ஈஷா யோக மையத்திற்கு ஒரு நாள் சென்று வாருங்கள், நான் வேண்டுமென்றால் சொல்கிறேன்.  அங்கு போனால் சரி ஆகிவிடும் என்று கூறினாராம். முழு கிறிஸ்தவர் மதக் குடும்பத்தில் இருந்து வந்த எஸ்.ஏ.சி ரஜினி சொன்னார் என்பதற்காக அங்கு சென்று தியானம், யோகா இவற்றையெல்லாம் செய்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் ரஜினியின் அறிவுரைப்படியே திருவண்ணாமலை சதுரகிரிக்கும் போய் வலம் வந்திருக்கிறார். அதன் பிறகே தன் கோபம் குறைந்திருக்கிறது என்று சொன்னாராம். சொல்லப்போனால் எஸ்.ஏ.சியின் ஆன்மீகக் குருவாக ரஜினிதான் இருந்து வருகிறாராம். இதன் காரணமாகவே ஒரு மேடையில் ரஜினியின் காலில் எஸ்.ஏ.சி விழுவதும் அதை ரஜினி தடுக்க வந்ததும் அரங்கேறியது.

rajini3
rajini3

இந்த நிகழ்வு தான் விஜய் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியது. தன் நடிகரின் தந்தை இன்னொரு நடிகரின் காலில் எப்படி விழலாம் என்று எண்ணியே எஸ்.ஏ.சியின் மீது விஜய் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருந்தனர். ஆனால் அதற்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருப்பது தெரியாது அவர்களுக்கு. இந்த தகவலை வலைப்பேச்சு அந்தனன் அவரது சேனலில் தெரிவித்தார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.