Cinema News
சத்யராஜ் வில்லனாக கலக்கிய 6 திரைப்படங்கள்.. என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்குறீங்களே!…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் சத்யராஜ், சினிமாவிற்கு வந்த புதிதில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வந்தார். அதன் பின்தான் “கடலோரக் கவிதைகள்”, “பாலைவன ரோஜாக்கள்”, “மந்திர புன்னகை” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார்.
அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்தார் சத்யராஜ். தற்போது தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் முக்கிய நடிகராக திகழ்ந்து வருகிறார் சத்யராஜ். இந்த நிலையில் சத்யராஜ் வில்லனாக கலக்கிய டாப் 5 திரைப்படங்களை குறித்து தற்போது பார்க்கலாம்.
1.நூறாவது நாள்
1984 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த், மோகன், நளினி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “நூறாவது நாள்”. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக அமைந்தது. அதே போல் அக்காலகட்டத்தில் மிகவும் பயங்கரமான த்ரில்லர் திரைப்படமாகவும் அமைந்தது.
இதில் சத்யராஜ், ஜெயராமன் என்ற கதாப்பாத்திரத்தில் மிக கொடூரமான கொலைக்காரராக நடித்திருந்தார். குறிப்பாக இதில் சத்யராஜ் மொட்டை அடித்தவாறு நடித்திருந்த தோற்றம் பார்வையாளர்களை பயமுறுத்தியது என்று கூட கூறலாம். சத்யராஜ்ஜின் இந்த கெட்டப் இப்போது வரை மிகவும் பிரபலமான கெட்டப்பாக இருக்கிறது.
- பகல் நிலவு
1985 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பகல் நிலவு”. இத்திரைப்படத்தில் முரளி, ரேவதி ஆகியோர் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். இதில் தேவராஜ் என்ற ஆதிக்கம் செலுத்தும் பண்ணையார் கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.
மக்களின் உழைப்பை சுரண்டும் பண்ணையார் கதாப்பாத்திரத்தை கதாநாயகன் எதிர்ப்பது போன்ற கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் சத்யராஜ் ஒரு அகங்காரம் பிடித்த பணக்காரராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார்.
3.மிஸ்டர் பாரத்
1986 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “மிஸ்டர் பாரத்”. இதில் ரஜினிகாந்த்துக்கு தந்தையாக சத்யராஜ் நடித்திருந்தார். ரஜினிகாந்த்தின் தாயாரை காதல் என்ற பெயரில் ஏமாற்றி கர்ப்பமடையச் செய்து அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிடுவார் சத்யராஜ்.
தனது தாயாரை ஏமாற்றிய தந்தை சத்யராஜ்ஜை தட்டிக்கேட்க வேண்டும் என்ற சவாலோடு அவரை எதிர்க்க துணிவார் ரஜினிகாந்த். இதில் சத்யராஜ் எந்த வித மிகை யதார்த்தமும் இல்லாத சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
- காக்கிச் சட்டை
1985 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, மாதவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “காக்கிச் சட்டை”. இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார். இதில் விக்கி என்ற கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார்.
சத்யராஜ்ஜின் மிகப் புகழ்பெற்ற வசனமான “தகிடு தகிடு” என்ற வசனம் இத்திரைப்படத்தில்தான் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- விக்ரம்
1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, லிஸ்ஸி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கியிருந்தார்.
இதில் சுகிர்தராஜா என்ற பயங்கரவாதி கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். ஒற்றைக் கண் கண்ணாடியுடன் மிகவும் டெரரான லுக்கில் சத்யராஜ் மிகவும் அசத்தலாக இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.
- அமைதிப் படை
1994 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “அமைதிப்படை”. இதில் போலீஸ் அதிகாரி, அரசியல்வாதி என்ற இரு வேடங்களில் சத்யராஜ் நடித்திருந்தார்.
குறிப்பாக இதில் சத்யராஜ் ஏற்று நடித்திருந்த நாகராஜ சோழன் எம்.எல்.ஏ என்ற கதாப்பாத்திரம் மிக பிரபலமான கதாப்பாத்திரமாகும். எந்த வித ஆக்சன் காட்சிகளும் இல்லாமல் தனது நடிப்பின் மூலமாகவே டெரரான வில்லனாக இத்திரைப்படத்தில் வலம் வந்தார் சத்யராஜ்.