தனுஷின் சூப்பர் ஹிட் பாடல்!.. கேட்டாலே காண்டாகும்.. மனம் குமுறும் வெற்றிமாறன்!..

Published on: January 21, 2023
vetri
---Advertisement---

தமிழ் சினிமாவில் பிரமிக்க வைத்த கூட்டணி என்றால் அது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி தான். வெற்றிமாறனின் முதல் படமே தனுஷ் நடித்த பொல்லாதவன் திரைப்படம் தான். அந்த படம் மாபெரும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. கதைக்கு உள்ள அம்சத்தை மிகவும் எதார்த்தமாகவும் நேர்த்தியாகவும் எடுப்பதில் வெற்றிமாறன் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்கிறார்.

அந்த படத்தின் வெற்றி மீண்டும் அவர்களை ஒன்று சேர்த்தது. ஆடுகளம் என்ற மதுரை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்த படமும் எப்பேற்பட்ட வெற்றி பெற்றது என்று அனைவரும் அறிந்த ஒன்றே. சொல்லப்போனால் தனுஷ் கெரியரில் ஒரு மிகச்சிறந்த இடத்தை பிடித்ததற்கு வெற்றிமாறனும் ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது புரிகிறது.

vetri1
tapsi

அதனை அடுத்து வடசென்னை, அசுரன் போன்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து தனுஷை அனைவரும் அன்னாந்து பார்க்கிற இடத்தில் உட்கார வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இதன் காரணமாக இருவரும் உடன் பிறவா சகோதரர்கள் போலவே பல பேட்டிகளில் ஒருவரை ஒருவர் பாராட்டி பெருமை பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : ஏற்கெனவே பட்ட அவமானம்!.. வாழ்வா? சாவா? விளிம்பில் இருந்த எம்ஜிஆர்…

இந்த நிலையில் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் ஆடுகளம் படத்தை பற்றிய தன் அனுபவத்தை பகிர்ந்தார். அந்த படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் செம ஹிட். குறிப்பாக சினேகன் வரிகளில் அமைந்த ‘வெள்ளாவி வச்சுத்தான் வெளுத்தாங்கேளா’ என்ற பாடல் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

ஆனால் இந்த பாடலைப் பற்றி வெற்றிமாறன் குறிப்பிடுகையில் முதலில் இந்த பாடலை பற்றி பெரிதாக நினைக்கவில்லை. படமாக்கப்பட்ட பிறகு தான் அந்த பாடலின் பின்னனியில் இருக்கும் கருத்தை புரிந்து கொண்டேன். அதன் பிறகே இந்த பாடல் ஏன் வைத்தோம் என்று மிகவும் வேதனைப்பட்டேன் என்று கூறினார்.

vetri2
dhanush

ஏனெனில் அந்த பாடல் உணர்த்தும் கருத்த என்னவென்றால் வெள்ளையாக இருக்கும் பெண்களை மட்டும் தான் ரசிப்பீர்களா? என்ற நிலைமைக்கு அந்த பாடல் தள்ளப்படும். அது எவ்ளோ பெரிய தவறு? அப்பவே சொல்லியிருந்தால் சினேகன் வேறு பாடல் வரிகளை மாற்றிக் கொடுத்திருப்பார். ஆனால் அந்த சமயத்தில் எல்லாரும் அந்த பாடலை கொண்டாடினார்கள் என்பதால் அதை அப்படியே விட்டுவிட்டேன் என்று வெற்றிமாறன் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.