
Cinema News
கமல், ரஜினியா? யாருய்யா அவங்க?.. பேரை கேட்டதும் காண்டான பழம்பெரும் இயக்குனர்..
Published on
By
50, 60களில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் ஸ்ரீதர். அந்தக் காலங்களில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர்,சிவாஜி, ரவிச்சந்திரன், முத்துராமன் என அனைத்து முன்னனி நடிகர்களையும் வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர்.
kamal rajini
70களுக்கு பிறகு ரஜினி, கமல் இவர்கள் வந்த பிறகு எடுக்கப்பட்ட படம் தான் ‘இளமை ஊஞ்சலாடுகிறது’ என்ற திரைப்படம். இந்தப் படம் தயாராகுவதற்கு முன் எம்ஜிஆரை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று எண்ணிய ஸ்ரீதர் அந்த நேரத்தில் தேர்தல் அறிவித்ததால் எம்ஜிஆர் முழு மூச்சாக அரசியலில் குதித்து விட்டார். அதன் பின்னரே இளமை ஊஞ்சலாடுகிறது கதையை கையில் எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க : ஆசையாக நடிக்க வந்த மனோரமா!.. அழ வைத்து வேடிக்கை பார்த்த நடிகர்.. அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம்..
ஆனால் முதலில் இந்த படத்திற்கு வேறொரு நடிகர்களை தான் ஸ்ரீதர் கமிட் செய்து வைத்திருந்தாராம். ஆனால் அது பிடிக்காத காரணத்தால் அவருக்கு உதவியாளராக இருந்த பி.வாசுவும் சந்தான பாரதியும் ரஜினி, கமலை கூறியிருக்கின்றனர். ஏனெனில் அந்த நேரத்தில் 16 வயதினிலே படம் வெளியாகி தாறுமாறு ஹிட். மேலும் இளசுகளுக்கு பிடித்தமான காம்போவாக இவர்கள் மாறியிருந்தனர்.
kamal rajini
அதன் காரணமாகவே ரஜினி, கமல் பெயரை பரிந்துரைத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீதருக்கு அந்த பேரைக் கேட்டதும் கடுங்கோபமாம். யாருய்யா அந்த ரஜினி, கமல்? என்று எகத்தாலமா கேட்டிருக்கிறார். அதற்கு பி.வாசு 16வயதினிலே படத்தை சொன்னதும் ஸ்ரீதர் என்ன எல்லாரும் 16 வயதினிலே 16 வயதினிலே என்று கொண்டாடுகிறீர்கள்?
இதுவே 64 காலகட்டமாக இருந்திருந்தால் நடக்கிறதே வேறு, என்கிட்ட எல்லாம் இப்படி வந்து பேச முடியுமா? நீங்களாம் யார்? வெளியே போங்க முதல்ல, நான் கூப்பிடுகிற வரைக்கும் இந்தப் பக்கமே வரக்கூடாது என்று விரட்டி விட்டாராம். ஆனால் ஸ்ரீதருக்கு ஒரு மகன், மகள் இருக்க அவர்கள் கமல், ரஜினியின் மீது இளந்தலைமுறையினர் எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கின்றனர் என்பதை கூறியிருப்பார்கள்,
rajini sridhar
அதனால் ஸ்ரீதர் அந்தப் படத்தில் ரஜினி, கமலை ஓகே செய்திருப்பார் என்று பி.வாசு ஒரு பேட்டியில் கூறினார். அந்த படத்திற்காக கமல் வாங்கிய சம்பளம் 75000 ரூபாய், ரஜினி வாங்கிய சம்பளம் 25000 ரூபாயாம்.
சர்ச்சை நாயகன் பாலா : kpy பாலா மீது பல சர்ச்சைகள் அவரை சுற்றி சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை பாலா...
Ajith Vijay: தமிழ் சினிமாவில் எப்படி எம்ஜிஆர் – சிவாஜிக்கு பிறகு ரஜினியும் கமலும் பல சாதனைகள், வெற்றிகளை குவித்து வந்தார்களோ...
சிம்புவுடன் இணைந்த வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முக்கிய, அதே சமயம் சிறந்த இயக்குனராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இத்தனைக்கும்...
வடிவேலுவின் கோபம் : தற்போது சமூக வலைதளங்களில் வைகைப்புயல் வடிவேலுதான் பேசும் பொருளாக மாறி உள்ளார். அதற்கு காரணம் சமீபத்தில் அவர்...
தனுஷை வைத்து பல படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இதில்...