இரண்டே படங்களில் சரோஜாதேவியை ஓவர் டேக் செய்த ஜெயலலிதா… அப்படி எந்த விஷயத்தில் முந்துனாங்க தெரியுமா??

Published on: January 23, 2023
Saroja Devi and Jayalalithaa
---Advertisement---

கன்னடத்து பைங்கிளி என்று அழைக்கப்படும் சரோஜா தேவி கன்னடத்தில் “மகாகவி காளிதாஸா” என்ற திரைப்படத்தின் மூலம்தான் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்தார். அதன் பின் கன்னடத்தில் நான்கு திரைப்படங்களில் நடித்த சரோஜா தேவி “திருமணம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Saroja Devi
Saroja Devi

அதன் பின் தமிழ், கன்னடம் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆகிய பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்த சரோஜா தேவி இந்தியாவின் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். தமிழில் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன், சிவாஜி கணேசன் என டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடிப் போட்டு நடித்துள்ளார் சரோஜா தேவி.

இந்த நிலையில்னதான் சரோஜா தேவியை இரண்டு திரைப்படங்களின் மூலம் ஓவர் டேக் செய்திருக்கிறார் ஜெயலலிதா. எதில் அப்படி முந்தினார் தெரியுமா?

MGR and Saroja Devi
MGR and Saroja Devi

அதாவது சரோஜா தேவி எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக “எங்க வீட்டுப்பிள்ளை”, “அன்பே வா”, “தெய்வத் தாய்”, “என் கடமை” போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவ்வாறு சரோஜா தேவி எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த திரைப்படங்களின் எண்ணிக்கை மொத்தம் 26.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் படப்பிடிப்பை விட்டு வெளியேறிய அந்த முக்கிய இயக்குனர்… என்னவா இருக்கும்??

MGR and Jayalalithaa
MGR and Jayalalithaa

ஆனால் ஜெயலலிதா சரோஜா தேவியை விட இரண்டு திரைப்படங்கள் அதிகமாக நடித்து அவரை முந்தியுள்ளார். அதாவது ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக 28 திரைப்படங்களில் நடித்துள்ளாராம். இவ்வாறு இரண்டே திரைப்படங்களில் சரோஜா தேவியை ஓவர் டேக் செய்துள்ளார் ஜெயலலிதா.

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.