
அதன்பின் மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரும் ஜாலியாக நடனமாடியுள்ளனர். அப்போது அவர்களுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளை கணேசும், மணப்பெண் சோப்னாவுடன் சேர்ந்து நடனமாடினர். அப்போது திடீரென கணேஷ் மயங்கி கீழே விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மணமகள் மற்றும் உறவினர்கள் அவரை அருகிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் மாரடைப்பில் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் கூறிவிட்டார்.
காலையில் திருமணம் நடந்து மாலையில் புதுமாப்பிள்ளை இறந்ததால் மணப்பெண் உள்ளிட்ட அவரின் உறவினர்கள் கதறி அழுதனர்.