Cinema News
விஜய் பட இயக்குனரை நம்பி மோசம் போன மகேஷ் பாபு… அடக்கொடுமையே!!
கடந்த 2012 ஆம் ஆண்டு விஜய், வித்யுத் ஜம்வால், காஜல் அகர்வால் ஆகியோரின் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “துப்பாக்கி”. இத்திரைப்படம் விஜய் கேரியரிலேயே ஒரு மிகப்பெரிய திருப்புமுனை வாய்ந்த திரைப்படமாக அமைந்தது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு, தனது பேட்டி ஒன்றில் “துப்பாக்கி” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிக்க முடிவெடுத்ததாகவும் அதன் பின் மகேஷ் பாபு நடித்த தோல்வி திரைப்படத்தை குறித்தும் ஒரு அரிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அதாவது “துப்பாக்கி” திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் மகேஷ் பாபு நடிப்பதாக இருந்ததாம். ஆனால் “துப்பாக்கி” திரைப்படத்தின் டப்பிங் உரிமையை ஆந்திராவில் ஒரு நிறுவனம் வாங்கியிருந்ததாம். அந்த நிறுவனத்தார் மகேஷ் பாபுவை சந்தித்து “ஆந்திராவில் விஜய்க்கு ஒரு மாஸ் ஆடியன்ஸ் உண்டு. ஆதலால் “துப்பாக்கி” தெலுங்கு டப்பிங் நன்றாக ஓடும். எனவே நீங்கள் “துப்பாக்கி” ரீமேக்கில் நடிக்க வேண்டாம். ஏ.ஆர்.முருகதாஸின் வேறு ஒரு கதையில் நடியுங்கள்” என கோரிக்கை வைத்தார்களாம்.
இதையும் படிங்க: ஏகே 62 இயக்குனர் மாற்றம்… விக்னேஷ் சிவனால் முடியாத காரியம்?? திடீரென டிவிஸ்டு வைத்த படக்குழு…
அந்த கோரிக்கையை மகேஷ் பாபுவும் ஏற்றுக்கொண்டாராம். அதன் பிறகுதான் ஏ.ஆர்.முருகதாஸ் “ஸ்பைடர்” திரைப்படத்தின் கதையை மகேஷ் பாபுவிடம் கூறியுள்ளார். மகேஷ் பாபுவும் அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். எனினும் “ஸ்பைடர்” திரைப்படம் மகேஷ் பாபுவின் கேரியரில் மிகவும் சுமாரான திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.