‘பருத்திவீரன்’ படத்தால ஒரு மண்ணும் நடக்கல.. 17வருஷம் வீட்ல இருந்தது தான் மிச்சம்!.. புலம்பும் நடிகர்..

Published on: January 30, 2023
karthi
---Advertisement---

இயக்குனர் அமீர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பருத்திவீரன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நடிகை பிரியாமணி, நடிகர் சரவணன் போன்ற பல நடிகர்கள் நடித்து படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் பருத்திவீரன் படம் தான் கார்த்தி நடித்த முதல் படம்.

மதுரை கதைகளத்தோடு வெளியான பருத்தி வீரன் திரைப்படம் கார்த்தியின் கெரியரில் மிகவும் திருப்பு முனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. மேலும் பிரியாமணிக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படமாகவும் விளங்கியது. இந்த படத்தின் வெற்றி கார்த்திக்கு மிகப்பெரிய வாய்ப்பை வாரி வழங்கியது.

karthi1
karthi1

இந்த நிலையில் படத்தில் கார்த்திக்கு சித்தப்பாவாக நடித்த நடிகர் சரவணன் இந்த படத்தில் நடித்ததின் அனுபவத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறினார். 90களில் அனைவரையும் கவர்ந்த ஹீரோவாக விளங்கினார் சரவணன்.

இதையும் படிங்க :கொஞ்சம் மிஸ் ஆகிருந்தா கோமாவுக்கு போயிருப்பாரு சீயான்!.. தூக்கி நிறுத்தியவருக்காக உயிரையும் கொடுக்க துணிந்த சம்பவம்..

கிட்டத்தட்ட மக்கள் சரவணனை இன்னொரு விஜயகாந்த் என்றே கருதினர். அந்த அளவுக்கு சரவணனின் தோற்றம் முதல் மொழி, பாவனை இவை எல்லாம் விஜயகாந்தை ஒத்தே இருந்தது. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு பிறகு சரவணனுக்கு வாய்ப்புகள் சரிவர அமையவில்லை.

karthi2
karthi saravanan

நீண்ட இடைவெளிக்கு பிறகு பருத்தி வீரன் படம் தான் அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால் பருத்திவீரன் படத்தால மக்கள் வேண்டுமென்றால் சந்தோஷப்பட்டிருக்கலாம், ஆனால் எனக்கு ஒரு புகழும் இல்லை, சந்தோஷமும் இல்லை என்றும் அந்தப் படத்தால பணமும் கிடைக்கல என்று புலம்பித் தள்ளினார்.

மேலும் அதன் பிறகு கிட்டத்தட்ட 17 வருடம் வீட்ல சும்மாதான் இருக்கேன் என்றும் படவாய்ப்புகள் வந்தது, ஆனால் பருத்திவீரன் படத்தில் நடித்த கதாபாத்திரம் மாதிரியே நிறைய வாய்ப்புகள் வந்தது, நான் மறுத்து விட்டேன் என்றும் கூறினார். மேலும் எனக்கு உள்ள வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும், அது வரை காத்திருப்பேன் என்றும் அந்தப் பேட்டியில் கூறினார் சரவணன்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.