Connect with us
kamal

Cinema News

ஜெய்சங்கர் சொன்ன ஒரு வார்த்தை!.. நடிகராக மாறிய கமல்.. அவர் மட்டும் இல்லன்னா?!..

5 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் கமல். களத்தூர் கண்ணம்மா துவங்கி விக்ரம் வரை நடிப்பில் பல பரிமாணங்களை எடுத்தவர். ரசிகர்களால் உலகநாயகன் என அழைக்கப்படுபவர். சினிமாவில் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை செய்யும் ஒரே நடிகர் இவர்தான். ஆனால், எந்த துறையாக இருந்தாலும் சரியான் ஒருவரால் நாம் வழிநடத்தப்பட வேண்டும். இல்லையேல் தடம் மாறி போகும் நிலை ஏற்படும். கமலுக்கும் இது நடந்துள்ளது.

kiamal

kiamal

5 வயதிலேயே நடிக்க வந்துவிட்டாலும், வாலிப வயதை எட்டிய பின்னரே இவர் பாலச்சந்தரின் கண்ணில்பட்டு நடிகராக மாறினார். இடைப்பட்ட காலத்தில் ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் கமல். அப்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெய்சங்கர், சிவாஜி என பல நடிகர்களுக்கு நடனம் சொல்லி கொடுத்தவர் கமல்.

ஒருமுறை ஜெய்சங்கர் நடிக்கும் படத்தில் கமல் வேலை செய்துள்ளார். அப்போது அவரை பார்த்த ஜெய்சங்கர் ‘எவ்வளவு நாளைக்கு திரைக்கு பின்னாலேயே இருக்கப்போகிறாய். நீ நல்ல நடிகன். இப்படியே காலம் தள்ளிவிடாதே’ என அறிவுரை செய்து கமலை நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டிவிட்டார். அதோடு, அந்த படத்திற்காக கமல் நடனம் ஆடி காட்டியதை வீடியோ எடுத்து வைத்திருந்தனர். ஜெய்சங்கர் அந்த காட்சியையும் படத்தில் இணைக்க சொன்னார். ஒருவேளை ஜெய்சங்கர் கமலுக்கு அதை சொல்லவில்லை எனில், ஒரு நடன இயக்குனராகவே கமல் காலம் தள்ளியிருக்கவும் வாய்ப்புண்டு. சரியான் நேரத்தில் ஜெய்சங்கர் கொடுத்த அறிவுரை கமலை நடிகனாக மாற்றியது.

jai shankar

அதேபோல், கமலுக்கு பலவிதமான வேடங்கள் கொடுத்து இயக்குனர் பாலச்சந்தர் அவரை வளர்த்துவிட்டார். இப்படித்தான் முழுமையான நடிகராக கமல் மாறினார். கமலுக்கு அறிவுரை சொன்ன ஜெய்சங்கர் பின்னாளில் கமலின் படங்களில் வில்லனாகவும் நடிக்கும் காலம் வந்தது. அப்போதும் மறுப்பு சொல்லாமல் நடித்து கொடுத்தார் ஜெய்சங்கர். இதை கமலே ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜயகாந்தும் நானும் ஒன்னா?.. என் வளர்ச்சியை தடுத்ததே இதுதான்!.. புலம்பும் பிரபல நடிகர்..

Continue Reading

More in Cinema News

To Top