Connect with us
Nagesh

Cinema News

நாகேஷிடம் இருந்து இதை எல்லாம் கத்துக்காதீங்க… எச்சரிக்கை விடுத்த பிரபல தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக திகழ்ந்த நாகேஷ், நகைச்சுவை கதாப்பாத்திரம் மட்டுமல்லாது வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் ஆகிய பல கதாப்பாத்திரங்களிலும் பொருந்தக்கூடிய பன்முக நடிகராக வலம் வந்தார். குறிப்பாக தனது தனித்துவமான நடிப்பின் மூலமும் உடல் மொழியின் மூலமும் மக்களின் மனதில் தனியாக ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டார் நாகேஷ்.

Nagesh

Nagesh

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் நாகேஷ். மேலும் ஜெயசங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார்.

பாலச்சந்தரின் மிக நெருங்கிய நண்பராக திகழ்ந்து வந்த நாகேஷ், அவர் இயக்கிய “நீர்க்குமிழி”, “எதிர்நீச்சல்” போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தார். மேலும் பாலச்சந்தர் திரைப்படங்கள் பலவற்றிலும் நடித்து வந்தார் நாகேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் பாலச்சந்தருக்கும் நாகேஷுக்கும் சிறு விரிசல் ஏற்பட்டது. எனினும்  “அபூர்வ ராகங்கள்” திரைப்படத்தின் மூலம் மீண்டும் இருவரும் இணைந்தனர்.

நாகேஷிற்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கமும் மதுப்பழக்கமும் இருந்தது. ஆதலால் 1970களில் ஒரு முறை உடல் நிலை சரியில்லாமல் போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கிட்டத்தட்ட நாகேஷ் செத்து பிழைத்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு மிக மோசமாக அவரது உடல் நிலை இருந்ததாம். எனினும் தீவிர சிகிச்சைக்குப் பிறகு நாகேஷ் தனது உடல் நலம் தேறி மீண்டு வந்தார்.

Nagesh

Nagesh

இந்த நிலையில் நாகேஷின் பிளஸ் மற்றும் மைனஸ்கள் குறித்து பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் தனது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதாவது நாகேஷினுடைய அற்புதமான நடிப்பும், ஞாபக சக்தியும் அவருடைய மிகப்பெரிய பிளஸ். அவருடைய பலவீனம் என்னவென்றால் ஒரு காலகட்டத்தில் அவர் மதுவுக்கு பெரிதளவில் அடிமையானார். அதன் காரணமாக பல பட வாய்ப்புகளை அவர் இழந்தார். ஒரு காலகட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும் நாகேஷுக்கும் இடையே சில பிரச்சனைகள் வருவதற்கும் அவரின் மது பழக்கம் காரணமாக இருந்ததாம். மேலும் இது போன்ற மதுப்பழக்கத்திற்கு தற்போதுள்ள நடிகர்கள் அடிமையாகக்கூடாது எனவும் கூறியிருந்தார்.

Continue Reading

More in Cinema News

To Top