
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் 5 கோடி பேரால் பின் தொடரப்படும் முதல் இந்தியராக சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர். ஓய்வறையில் சக வீரர்களுடன் இருக்கும் புகைப்படம், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் என அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.
இதனால் இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகமாகியுள்ளது. அந்த வகையில் 5 கோடி பேரால் பின் தொடரப்படும் முதல் இந்தியர் என்ற மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இவருக்கு அடுத்தடுத்த இடங்களில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே மற்றும் மோடி ஆகியோர் உள்ளனர்.