பிறந்த வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்ட சினிமா பாடகி – காரணம் இதுதான் !

1688b7064b1aeda1e43afa3325858f1c

கன்னட சினிமாக்களில் பாடல்கள் பாடி பிரபலமான பாடகி சுஷ்மிதா கணவர் வீட்டின் தொல்லை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கன்னட சினிமாவில் பின்னணியாக பாடகியாக இருந்த சுஷ்மிதா ராஜன், ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பெற்றோர் பார்த்து வைத்த  மணமகனை மணந்து கொண்டார். தனது கணவனோடு வாழ ஆரம்பித்த பிறகுதான் அவர்கள் குடும்பத்தின் சுயரூபம் தெரியவந்துள்ளது.

குடும்பமே சேர்ந்து அவரிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர். இதனால் மன வேதனையடைந்த சுஷ்மிதா நேற்று பெற்றோரின் வீட்டுக்கு வந்து தாய் மற்றும் சகோதரரிடம் இதுபற்றி புலம்பியுள்ளார். பின்னர் நேற்றிரவு தூங்க சென்றவர் இன்று காலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.

இதையடுத்து அவர் தாய் மற்றும் சகோதரன் இருவருக்கும் அனுப்பிய தற்கொலை கடிதத்தை செல்போனில் பார்த்துள்ளனர். அதன் பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கிய படி பிணமாகக் கிடந்துள்ளார். அந்த கடிதத்தில் ‘என் சாவுக்கு என் கணவர் குடும்பம்தான் காரணம். பிறந்த வீட்டில் இறந்தால்தான் அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் கிடைக்கும் என இங்கு வந்தேன். அவர்களை சும்மா விட்டு விடாதீர்கள். நம்ம சொந்த ஊரிலேயே என்னை புதைத்துவிடுங்கள். இல்லை என்றால் எரித்து விடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து கணவன் சரத்குமார், பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை தேட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Categories Uncategorized

Leave a Comment