வாய்ப்பு கிடைத்தும் இப்படி ஒரு சோதனையா.. எம்.ஜி.யாருக்கு நேர்ந்த சோகம்..

By Hema
Published on: January 31, 2023
mgr
---Advertisement---

எம்.ஜி.ஆர் ஆரம்ப காலத்தில் நாடகத்தில் நடித்து பின்பு சிறு சிறு கதாபாத்திரங்களில் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். அப்படியே அவர் சதிலீலாவதி திரைப்படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட சுவாரசிய சம்பவத்தை பார்ப்போம். சதிலீலாவதி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ஆனந்த விகடன் இதழில் வந்த சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.

MGR
MGR

எம்.ஜி.ஆருக்கு சதிலீலாவதி படத்தில் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் நாள் படப்பிடிப்பிற்காக ஸ்டூடியோ வந்தார். சில மணி நேரத்திற்கு பின்பு இயக்குனர் எல்லிஸ் டங்கன் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தார். பின்னர் எம்.ஜி.யாரிடம்”வசனத்தை மனப்பாடம் செய்து விட்டாயா? ”என்று கேட்டார். அதற்கு மக்கள் திலகம் ”மனப்பாடம் செய்து விட்டேன்” என்று கூறினார். அன்று காட்சி அமைப்பிற்கு சைக்கிள் தேவைப்படுவதால் உடனே”சைக்கிள் எங்கே?”என்று கேட்டார். அதற்கு மக்கள் திலகம் சைக்கிளா என்று ஆச்சரியத்துடன் கேட்க உடனே எல்லிஸ் ஸ்டங்கன் கோபமாக உதவியாளரை பார்த்து ”சைக்கிள் கொண்டு வர சொன்னேனே சொல்லலையா” என்று கேட்டார்.

MGR
MGR

அதற்கு உதவியாளர் சற்று சமாளித்தபடியே சொல்லிவிட்டேன்” சைக்கிள் வெளியே நிற்கிறது ”என்றார். பிறகு எம்.ஜி.யாரிடம் என்ன ”செய்வியோ தெரியாது சைக்கிளோடு வா இல்லையெனில் இந்த வாய்ப்பு பறிபோய்விடும்” என்றார் இயக்குனர் எல்லிஸ் டங்கன். வாய்ப்பு கிடைத்தும் இப்படி ஒரு சோதனையா என மனம் நொந்த மக்கள் திலகம் படப்பிடிப்பு தளத்தின் வெளியே வந்தார். பின்னர் அங்கே வெளியே நின்று கொண்டிருந்த பூட்டப்படாத சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் காட்சி நடித்து முடித்தார். அப்பொழுது அங்கே வந்த சைக்கிளின் உரிமையாளர் பிரசாத் எம்.ஜி.யாரிடம் தகராறு செய்தார் மக்கள் திலகம் தன் நிலைமையை எடுத்துக் கூறி பிரசாத்திடம் மன்னிப்பு கேட்டார்.

Hema

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.