Cinema History
எம்.ஜி.ஆரை கண்டித்த கலைவாணர் என். எஸ். கே ..என்ன நடந்தது தெரியுமா ..?
கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் என அழைக்கப்படும் நாகர்கோயில் சுடலைமுத்துப்பிள்ளை கிருஷ்ணன். தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகரும் பாடகரும் ஆவார்.பின் சாதாரண வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது கலையுலக வாழ்வை துவங்கினார். பின்னர் நாடக துறையில் நுழைந்தார். சொந்தமாக நாடகக் கம்பெனியையும் நடத்தினார். அப்போது தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்து தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும். பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
எம்.ஜி.ஆருக்கு அரசியலில் குரு அறிஞர் அண்ணா என்றால் சினிமாவில் குரு கலைவாணர் என். எஸ். கே எம்.ஜி.ஆர் அப்பொழுது நடிகராக பிரபலமாகவில்லை, அச்சமயத்தில் கொல்கத்தாவிற்கு படப்பிடிப்பிற்காக எம்.ஜி.ஆரும் கலைவாணரும் சென்றுள்ளனர். அப்பொழுது அங்கிருந்த நீரோடை ஒன்றில் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆரின் கால் செருப்பின் வார் அருந்து விட்டது. அவருக்கு புது செருப்பு வாங்க வேண்டும் நிலை ஏற்பட்டுவிட்டது. பின்னர் கலைவாணரிடம் நடந்ததை விளக்கிச் சொன்னார். புது செருப்பு வாங்க கலைவாணரை துணைக்கு அழைத்தார். அதற்கு கலைவாணர் சற்று யோசித்து நாளை காலை வாங்கி கொள்ளலாம் என்று சொன்னார்.
அடுத்த நாள் காலையில் எம்.ஜி.ஆர் புது செருப்பு வாங்க கலைவாணரை அழைக்க சென்றார். அப்பொழுது கலைவாணர் என். எஸ் .கே ஒரு பேப்பரில் சுருட்டிய பொருளைக் கொடுத்தார். அதை வாங்கிய எம்.ஜி.ஆர் பிரித்து பார்த்தார். அதில் அவருடைய பழைய செருப்பு தைத்து பாலிஷ் போட்டு புதிது போலவே இருந்தது.
என். எஸ்.கே எம். ஜி.யாரைப் பார்த்து” ராமச்சந்திரா நீ வாங்கும் சம்பளம் மிகக் குறைவு அதை இப்படி வீண் செலவு செய்யாதே சேமித்து வை உன் பழைய செருப்பை தைத்து விட்டேன் கண்டிப்பாக ஆறு மாதங்கள் உழைக்கும் ”என்று கூறினார். என்.எஸ்.கே இதிலிருந்து சிக்கனத்தை தன் சினிமா குரூ விடம் கற்றுக் கொண்டார் மக்கள் திலகம் எம்ஜிஆர்.