சிம்பு – தனுஷ் மோதலுக்கு காரணமாக இருந்த ரஜினி?.. இவ்ளோ நடந்திருக்கா?..

Published on: February 2, 2023
rajini
---Advertisement---

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர்கள் நடிகர் தனுஷ் மற்றும் நடிகர் சிம்பு. காலங்காலமாக தமிழ் சினிமாவில் இரட்டையர்களுக்கான போட்டிகள் இருந்து வந்து கொண்டே இருக்கையில் அஜித் விஜய் காம்போவிற்கு அடுத்தப்படியாக சரியான போட்டியாக கருதப்படுபவர்கள் நடிகர்கள் தனுஷும் சிம்புவும் தான்.

simbu
simbu dhanush

இருவருக்கும் சினிமா பின்புலம் அடித்தளமாக இருப்பதால் மிக எளிதாக சினிமாவிற்குள் வந்து தங்கள் திறமையை
வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.ஆனால் இதில் கொஞ்சம் நடிகர் சிம்பு மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்து ரசிகர்களின் அபிமானத்தை மிக முன்னதாகவே பெற்று விட்டார்.

ஆனாலும் தனுஷின் ஆக்ரோஷமான நடிப்பும் டெடிகேஷனும் ஒரு நட்சத்திர அந்தஸ்தை பெறவைத்தது. இதன் மூலம் தனுஷும் மக்கள் மனதில் அதிக வரவேற்பை பெற்றார். இருவருக்கும் இடையேயான போட்டி சரிவிகிதமாக வந்த நிலையில் திடீரென சிம்புவுக்கு ஒரு பிரேக் வந்தது.

simbu1
simbu dhanush

சர்ச்சை , தேவையில்லாத வதந்திகள், படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வராமை, உடல் எடை அதிகரிப்பு என முடங்கி இருந்தார் சிம்பு. அந்த நேரத்தில் தனுஷ் அவரது மார்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அதில் கிடைத்த வளர்ச்சி தான் தனுஷை மக்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

அசுரன், கர்ணன், என பல சமூக கருத்துக்கள் உடைய படங்களில் தன்னுடைய ஆக்‌ஷனையும் கலந்து ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். இப்படி பல போட்டிகல் சினிமா சம்பந்தமாக இருந்தாலும் அவர்களுக்குள் சொந்தப் பிரச்சினையிலும் போட்டிகள் இருந்து வந்தன என பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.

simbu2
simbu dhanush

மேலும் அவர் கூறும் போது ரஜினியின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதில் ஏதோ பிரச்சினை இருக்கும் போல, ஏனெனில் ஐஸ்வர்யாவும் சிம்புவும் க்ளாஸ்மேட்டாம். ஒன்றாக படித்தவர்களாம். அதனால் ஐஸ்வர்யாவை திருமணம் செய்வதில் சிம்புவுக்கு ஆர்வம் இருந்திருக்க வேண்டும்,

ரஜினியின் வீட்டிலோ இல்லை சிம்புவின் வீட்டிலோ சம்பந்தம் பண்ண யோசித்திருப்பார்கள், அந்த சமயத்தில் தனுஷ் ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்ததில் சிம்புவுக்கு வருத்தம் ஏற்பட்டிருக்கும், இது எப்பொழுதும் இந்த பனிப்போர் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.