Cinema History
நம்பியார் ஆடையை பார்த்ததும் ஷூட்டிங்கை நிறுத்திய எம்.ஜி.ஆர்.. எதற்காக தெரியுமா?..
எம்.ஜி.ஆர், நம்பியார் என இருவருமே நாடகங்களிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்க துவங்கிய முதலே நம்பியாரும் அவருடன் பல படங்களில் நடித்துள்ளார். கருப்பு வெள்ளை காலம் முதலே எம்.ஜி.ஆருக்கு வில்லனாக நடித்தவர் நம்பியார். எம்.ஜி.ஆருக்கு வில்லனாக அதிகமாக நடித்த நடிகர் நம்பியார்தான்.
ஒருமுறை எம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்த ஒரு திரைப்படத்தில் நம்பியாருக்கு இளவரசர் வேடம் கொடுக்கப்பட்டது. அதற்காக அவருக்கு அழகான ஆடை வழங்கப்பட்டது. அந்த ஆடையை அணிந்ததும் நம்பியாருக்கே மிகவும் பிடித்துப்போனது. இந்த உடையில் நாம் மிகவும் அழகாக இருக்கிறோம் என நம்பியாரே நினைத்தாராம்.
படப்பிடிப்பு துவங்கி நம்பியாரை நடிக்க கூப்பிட அவரும் அந்த உடையில் வந்து நின்றாராம். நம்பியாரின் உடையை பார்த்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை உடனே நிறுத்திவிட்டாராம். எம்.ஜி.ஆர் அணிந்திருந்த ஆடையை விட தன்னுடையை ஆடை அழகாக இருந்ததால்தான் பொறாமைப்பட்டு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என நம்பியார் கருதினாராம். மேலும், இனிமேல் அந்த உடையை நமக்கு கொடுக்கமாட்டார்கள் என்றும் நினைத்தாராம்.
இரண்டு நாட்கள் கழித்து படப்பிடிப்பு மீண்டும் நடந்தது. படப்பிடிப்புக்கு வந்த நம்பியாருக்கு அதே உடை கொடுக்கப்பட்டது. ஆச்சர்யப்பட்ட நம்பியார் ‘இந்த ஆடையை நான் அணிய எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டாரா?’ என கேட்டாராம். அப்புறம்தான் அவருக்கு விபரம் புரிந்துள்ளது. நம்பியாரின் ஆடை அழகாக இருந்ததால் தனக்கும் அது போலவே ஒரு உடையை தயார் செய்யுங்கள் என எம்.ஜி.ஆர் கூறியிருந்தாராம். ஏனெனில், நம்பியாருக்கு இளவரசர் வேடம் எனில் எம்.ஜி.ஆருக்கு அரசர் வேடம்.
எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் அந்த ஆடையை எனக்கு கொடுக்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவரிடம் இந்த நல்ல பண்பை நான் கற்றுக்கொண்டேன் என நம்பியாரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: ‘வாரிசு’ பட பிரம்மாண்ட வீடு!.. இவ்ளோ கோடியா?.. யாருடையது தெரியுமா?..