அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்த அந்த தருணம் வந்துவிட்டது… என்னன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க!!

Published on: February 4, 2023
Ajith Kumar
---Advertisement---

“அசல்” திரைப்படத்திற்கு பிறகு அஜித் குமார் தனது திரைப்படத்தின் புரோமோஷன்களில் கலந்துகொள்வதை நிறுத்திக்கொண்டார். அதே போல் எந்த பேட்டிகளிலும் அஜித் கலந்துகொள்வதும் இல்லை.

Ajith Kumar
Ajith Kumar

பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களையும் கலைத்துவிட்டதால் ரசிகர்களை சந்திப்பதையும் அஜித் நிறுத்திக்கொண்டார். மேலும் அஜித் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற எந்த சமூக வலைத்தளங்களிலும் இல்லை. இவ்வாறு வெளியுலகத்துக்கே தன்னை வெளிகாட்டிக்கொள்ளக்கூடாது என்ற முடிவில் அஜித் இருக்கிறார்.

எனினும் அஜித் குமார் பைக் ரேஸ் செல்லும்போதோ, விமான நிலையத்தில் தென்படும்போதோ சில புகைப்படங்கள் வெளிவரும். அதனை பார்த்துத்தான் ரசிகர்கள் ஆசுவாசமடைவார்கள்.

Ajith Kumar
Ajith Kumar

 “துணிவு” திரைப்படத்தின் புரோமோஷனுக்கு கூட அஜித் பத்திரிக்கையாளர்களையும் ரசிகர்களையும் சந்திக்க உள்ளார் என்று ஒரு தகவல் வெளிவந்தது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் குஷி ஆனார்கள். ஆனால் இந்த முறையும் ரசிகர்கள் ஏமாந்துப்போனார்கள்.

இந்த நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த அந்த தருணம் விரைவில் வரவுள்ளதாக பிரபல மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Ajith Kumar
Ajith Kumar

அதாவது வெகு காலத்திற்குப் பிறகு அஜித் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளாராம். இந்த சந்திப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வெளிவரும் எனவும் கூறியுள்ளார். அதே போல் அந்த சந்திப்பில் அஜித், தனது  ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனவாம். செய்யாறு பாலுவின் இந்த அதிர்ச்சியூட்டும் தகவலால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: அஜித்திடம் இருந்து கே.ஜி.எஃப் இயக்குனருக்கு பறந்த ஃபோன் கால்… ஒரு வேளை இருக்குமோ?

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.