Cinema News
லிங்கா படப்பிடிப்பில் புலம்பித் தள்ளிய ரஜினிகாந்த்… என்ன காரணம் தெரியுமா??
1975 ஆம் ஆண்டு வெளிவந்த “அபூர்வ ராகங்கள்” என்ற திரைப்படத்தின் மூலம்தான் ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க வந்து 47 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. எனினும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இப்போதும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக வலம் வந்தாலும், அந்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தலையில் ஏற்றிக்கொள்ளதாவர் அவர். அனுதினமும் தனது வீட்டில் அமைந்திருக்கும் கண்ணாடி அறையில் அமர்ந்துகொண்டு தன் முகத்தை பார்த்தவாறு, ‘சூப்பர் ஸ்டார் என்ற கர்வம் நம் தலைக்கு ஏறவேக்கூடாது” என்று தனக்கு தானே சொல்லிக்கொள்வாராம்.
இந்த நிலையில் “லிங்கா” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மிகவும் பதற்றத்துடன் புலம்பிய ஒரு சம்பவத்தை குறித்து பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளருமான இளவரசு சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “லிங்கா” படப்பிடிப்பில் ஒரு நாள் ரஜினிகாந்த் மிக பதற்றமாக நின்றுகொண்டிருந்தாராம். அன்றைய நாள் ரஜினிகாந்த் நடிக்க வந்து 40 வருடங்கள் நிறைவடைந்திருந்ததாக அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினார்களாம்.
அப்போது ரஜினிகாந்த் இளவரசுவிடம் “நான் ஏதோ ஒரு நம்பிக்கைல என்னோட கன்டெக்டர் வேலையை விட்டுட்டு இங்க வந்தேன். இப்போ எல்லாரும் என்னைய சூப்பர் ஸ்டாரா பாக்குறாங்க. இது எல்லாமே டக்குன்னு நடந்தது மாதிரி இருக்குது.
எல்லாம் அந்த கடவுளாலத்தான்னுதானே என்னால சொல்லமுடியும். நான் வேற என்ன சொல்ல முடியும். ஒரு தனி மனிதனாக இதை எப்படி என்னுடைய சாதனை என்று கூறமுடியும். இது எவ்வளவு சாதாரணமாக எனக்கு கிடைச்சிடுச்சி.
இதெல்லாம் நினைக்கும்போது எனக்கு இன்னைக்கு ரொம்ப படபடப்பா இருக்கு” என கூறி புலம்பினாராம். ரஜினிகாந்த் மிகப் பெரிய உச்சத்தை தொட்ட பிறகும் கூட, தனது வெற்றியை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருக்கிறார் என்றால், இந்த எளிமைதான் அவரை சூப்பர் ஸ்டாராக ஆக்கியிருக்கிறது என்பது கண்கூடு.
இதையும் படிங்க: எஸ்.ஏ.சி விஜய்க்கு பண்ண விஷயத்தை டி.ராஜேந்தர் சிம்புவுக்கு பண்ணலை!! அப்படி என்னவா இருக்கும்?