Connect with us
sivaji

Cinema News

புது கார் மீது சாய்ந்த எம்.ஆர்.ராதாவை கலாய்த்த சிவாஜி… பதிலுக்கு நடிகவேள் செஞ்சதுதான் ஹைலைட்!..

பொதுவாக நடிகர்களுக்கு மார்க்கெட்டில் வரும் புதிய புதிய கார்களை வாங்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அதனால் அதிக படங்களில் நடிக்கும் நடிகர்கள் வீட்டில் இரண்டு, மூன்று கார்களை வைத்திருப்பார்கள். நடிகைகள் என்றால் வெவ்வேறு நிறங்களில் பல கார்களை வைத்திருப்பார்கள். நடிகர் கவுண்டமணி வீட்டில் 10 கார்களை வைத்திருந்தார் என சொல்வார்கள்.

sivaji

சரி விஷயத்திற்கு வருவோம். நடிகர் திலகம் சிவாஜி ஒரு முறை புதிதாக வந்த பிளைமவுத் காரை வாங்கியுள்ளார். அந்த காரில் ஏ.வி.எம் ஸ்டுடியோவுக்கு வந்த சிவாஜி, காரை நிறுத்திவிட்டு மேக்கப் போட சென்றுவிட்டார். திரும்பி வந்து பார்த்தபோது, அந்த காரில் சாய்ந்தபடி நடிகர் எம்.ஆர்.ராதா நின்றிருந்தார். அதைப்பார்த்த சிவாஜி ‘என்னப்பா என் கார் மேல சாஞ்சி நிக்குற!.. உன் கலர் என் கார் மேல ஒட்டிக்கப்போகுது’ என கிண்டலடித்தாராம்.

mr radha

mr radha

அதற்கு எம்.ஆர்.ராதா ‘அப்படியா?’ என சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டாராம். வழக்கமாக யாராவது எதாவது பேசினால் தகுந்த பதிலடி கொடுக்கும் எம்.ஆர்.ராதா எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றது அங்கிருந்தவர்களுக்கு ஆச்சர்யமாக இருந்ததாம்.

mr radha

அடுத்த நாள் அதே ஸ்டுடியோவில் சிவாஜியின் காரின் அருகே மற்றொரு புதிய பிளைமவுத் கார் நின்றதாம். அந்த காரின் டிக்கியில் வைக்கப்போர் வைக்கப்படிருந்தது. அந்த காரிலிருந்து கன்றுக்குட்டியோடு எம்.ஆர்.ராதா கீழே இறங்கினாராம். இதைப்பார்த்த சிவாஜி ‘என்னப்பா இந்த கார்ல கன்னுக்குட்டிலாம் கொண்டு வர’ எனக்கேட்க, அதற்கு எம்.ஆர்.ராதா ‘ இந்த கார்லாம் எனக்கு கிடையாது. என் மாட்டுக்குதான். அதோட, நான் எப்பவும் காசுக்கு அடிமையாக மாட்டேன்’ என்று சொன்னாராம்.

இதையும் படிங்க: ஐயோ தாறுமாறா அள்ளுது!.. ஹாட் லுக்கில் சுண்டி இழுக்கும் ஹன்சிகா…

Continue Reading

More in Cinema News

To Top