மகிழ் திருமேனி அஜித் படத்தை இயக்குவதற்கு காரணமே விஜய்தான்!!… இந்த டிவிஸ்ட்டை நீங்க எதிர்பார்த்திருக்க மாட்டீங்க!!

Published on: February 6, 2023
AK 62
---Advertisement---

“துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை  விக்னேஷ் சிவன் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.

AK 62
AK 62

கொடுக்கப்பட்ட நாட்களுக்குள் விக்னேஷ் சிவன் ஸ்கிரிப்ட்டை முழுவதுமாக முடிக்கவில்லை என்ற காரணத்தால் லைகா நிறுவனம் இந்த முடிவை எடுத்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் அதே வேளையில் விஜய்யின் “லியோ” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதால் ,அந்த படத்துடன் போட்டிப் போடுவதற்கு நிகரான ஒரு கதையம்சம் தேவை என்பதனாலும், விக்னேஷ் சிவன் சொன்ன ஸ்கிரிப்ட் “லியோ” திரைப்படத்துடன் போட்டிப்போடும் அளவுக்கான ஸ்கிரிப்ட் இல்லை என்ற காரணத்தினாலும்தான் அவரை “ஏகே 62” புராஜக்ட்டில் இருந்து நீக்கியதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

காரணம் எதுவாகிலும் விக்னேஷ் சிவன் “ஏகே 62” திரைப்படத்தில் இருந்து விலகியது உண்மைதான் என பல பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். இதனை தொடர்ந்து அஜித், விஷ்ணு வர்தனுடன் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்தது. ஆனால் அந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் கூறப்படுகிறது.

Magizh Thirumeni
Magizh Thirumeni

எனினும் சமீப நாட்களாக இயக்குனர் மகிழ் திருமேனி, அஜித்தின் 62 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளிவருகிறது. இந்த தகவல் ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தான் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மகிழ் திருமேனிக்கு அஜித்தை வைத்து இயக்க வாய்ப்பு கிடைத்ததற்கான காரணம் குறித்து ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.

மகிழ் திருமேனி “கலகத் தலைவன்” திரைப்படத்தை உருவாக்கிக்கொண்டிருந்தபோது விஜய்க்கு கதை சொல்ல வாய்ப்பு கிடைத்ததாம். விஜய்யும் அந்த கதையில் நடிப்பதாக ஒப்புக்கொண்டாராம். ஆனால் “கலகத் தலைவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பை மகிழ் திருமேனி தவறவிட்டுவிட்டாராம்.

Vijay
Vijay

எனினும் மகிழ் திருமேனி கூறிய கதைக்கு விஜய்யே ஓகே சொல்லியிருக்கிறார் என்பதால் அவரது ஸ்கிரிப்ட்டை நம்பலாம் என்று தயாரிப்பு நிறுவனம் மகிழ் திருமேனியை அணுகினார்களாம். மேலும் மகிழ் திருமேனி அஜித்துக்காக கூறிய கதை மிகவும் அற்புதமாக இருந்ததால் அஜித்தும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இவ்வாறு விஜய் மூலமாக அஜித்தை இயக்க மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க: மூச்சுக்குழாயில் ஏற்பட்ட திடீர் அடைப்பு… திணறிப்போய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன்… இவ்வளவு ரிஸ்க்கா எடுக்குறது?

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.