இந்த மாஸ் ஹிட் படத்தையா அர்ஜூன் வேண்டாம்ன்னு சொன்னாரு… அடக்கொடுமையே!!

Published on: February 7, 2023
arjun
---Advertisement---

ஆக்சன் கிங் என்று புகழப்படும் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். 90ஸ் கிட்ஸ்களை பொறுத்தவரையில் தனது திரைப்படங்களின் மூலம் தேசப் பற்றை ஊட்டியவர்களில் அர்ஜூனும் ஒருவர்.

Arjun
Arjun

அர்ஜூன் நிஜமாகவே தீவிரவாதிகளை எதிர்த்து சண்டை போடுபவர் என்றே அந்த காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்தவர்கள் அவரை கொண்டாடி வந்தனர். அந்தளவுக்கு மிரள வைக்கும் ஆக்சன் காட்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்தவர் அர்ஜூன்.

தனது சிறு வயதிலேயே புரூஸ்லீ படங்களுக்கு தீவிர ரசிகராக இருந்தவர் என்பதால் அந்த தாக்கத்தில் கராத்தே பயின்ற அர்ஜூன், தனது உடலையும் கட்டுக்கோப்பாக வளர்த்துக்கொண்டார். இப்போதும் கூட அர்ஜூன் தனது கட்டுமஸ்தான உடலை மெயின்டெயின் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Arjun Sarja
Arjun Sarja

அர்ஜூன் தற்போது ஹீரோவாக நடிப்பதை குறைத்துக்கொண்டு சமீப காலமாக வில்லனாகவும் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வருகிறார். “கடல்”, “இரும்புத்திரை”, “கொலைக்காரன்”, “ஹீரோ” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து தற்போது விஜய்யின் “லியோ” திரைப்படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார்.

இதனிடையே 1993 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த “ஜென்டில்மேன்” திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளிவந்துள்ளது.

Gentleman
Gentleman

அதாவது “ஜென்டில்மேன்” திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க மறுப்பு தெரிவித்திருக்கிறார் அர்ஜூன். இத்திரைப்படத்தின் கதையை அர்ஜூனிடம் கூறியபோது அவர் இத்திரைப்படத்தில் நடிக்க விருப்பம் இல்லாமல் இருந்தாராம். எனினும் அதன் பின் “ஜென்டில்மேன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். “ஜென்டில்மேன்” திரைப்படத்திற்காக அர்ஜூன், சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் மாநில விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அந்த பக்கம் போயிடாதீங்க தலைவா… எம்.ஜி.ஆர் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென கத்திய பெண்மணி!!

Arun Prasad

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.