விக்ரமின் சினிமா கெரியரை மாற்றிய அமைத்த தல அஜித்.. அப்படி என்ன செய்தார் தெரியுமா..?

By Hema
Published on: February 7, 2023
AV
---Advertisement---

அஜித் குமார் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச நடிகர்களில் ஒருவர் . சினிமாவில் பக்கபலமின்றி தன்னந்தனியாக போராடி முன்னுக்கு வந்து இன்று தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருப்பவர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் தல என்று செல்லமாக அழைப்பார்கள். தன்னலம் பாராமல் பிறர் நலம் கருதி பெரும் உதவிகளை செய்து கொண்டிருப்பவர் அஜித் குமார். அப்படி ஆரம்ப காலத்தில் நடிகர் சியான் விக்ரமின் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரும் விபத்துக்கு பிறகு சியான் வாழ்க்கைக்கு உதவியாக அமைந்தவர் அஜித் குமார். அஜித்துக்கு பின்னணி குரல் கொடுத்தவர்.

AV
AV

 

ஆரம்ப காலத்தில் நடிகர் சியான் விக்ரம் சினிமாவில் நடிக்க போராடிக் கொண்டிருந்த காலம் அது. சிறு சிறு கதாபாத்திரங்களில் மலையாள படங்களில் நடிப்பது மற்றும் நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுப்பது என்று தான் இவரது சினிமா வாழ்க்கை அமைந்துள்ளது. பின்னர் நடிகராக பல படங்கள் நடித்தாலும் பெரிதும் தோல்வி படங்களாகவே அமைந்தது. தமிழ் சினிமாவில் இவர் ஒரு ராசி இல்லாத நடிகர் என்று கூறப்பட்டவர். பின்னர் இயக்குனர் பாலா வின் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட ”சேது” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறியப்பட்டார். இப்படம் இவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. பின்னர் ஏற்பட்ட கார் விபத்து சினிமா வாழ்க்கையை முடக்கியது.

AV
AV

 

பின்னர் மீண்டும் உடல் நலம் பெற்று நடிக்க தொடங்கிய படம் உல்லாசம். இதில் அஜித் கதாநாயகன் நடிக்க மகேஸ்வரி கதாநாயகியாக நடித்திருப்பார் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் விக்ரம் மற்றும் ரகுவரன் நடித்திருப்பார்கள். படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்திருப்பார். இப்படத்தில் அஜித்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்குமோ அதைவிட அதிகமாக முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரமாக விக்ரமுக்கு அமைத்துக் கொடுத்தவர் அஜித் குமார்.

AV
AV

 

இதைக் கண்டு விக்ரம் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். சினிமாவில் உதவி கிடைப்பது அரிது அதிலும் அன்று முன்னணி நடிகராக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு நடிகர் அவரின் படத்தில் இவ்வளவு இடம் கொடுப்பது பெரும் உற்சாகம் அளிக்கிறது என்றார். அஜித் சினிமாவில் எந்தவித உதவியும் இன்றி தானாக முன்னுக்கு வந்தவர். அதுபோல விக்ரமும் சினிமாவில் பக்கபலமின்றி வந்தவர் அவருக்கு இப்படத்தில் கிடைத்த வாய்ப்பு சினிமாவில் வெற்றிப் பாதை காண அடித்தளமாக அமைந்தது. என்று பிரபல யூட்டிப் சேனல் நேர்காணல் ஒன்றில் செய்யூர் பாலு தெரிவித்துள்ளார்.

Hema

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.