
கடந்த சில வருடங்களாக ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் எழுதி நெட்டிசன்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சதீஷ் தனது டிவிட்டரில் ‘நம் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்குடன் இணைவது மிக்க மகிழ்ச்சி’ என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ புது மாப்பிள்ளை எப்பிடி இருக்கீங்க. தம்பி நல்லா சிரிச்ச முகம். பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க. படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும். நல்லா நெருக்கி செய்வோம்’ என பதிவிட்டுள்ளார்.
புது மாப்பிள்ளை @actorsathish எப்பிடி இருக்கீங்க.தம்பி நல்லா சிரிச்ச முகம்.பாக்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க.படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.நல்லா நெருக்கி செய்வோம் #Friendship https://t.co/VirWiDTbvN
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 18, 2020